For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல் கலாமுக்கு கருணாநிதி வேண்டுகோள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்றும் கொலை, கொள்ளைகளைத் தடுக்க காவல் துறைக்குஉத்தரவிட வேண்டும் என்றும் முறையிடவே திமுக தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனுகொடுத்தனரே தவிர, அவரை அச்சுறுத்துவதற்காக அல்ல.

ஆனால், வதந்தி கிளம்பியதாம். இந்த கவர்னர் மாற்றப்பட்டு ஒரு சிபிஐ முன்னாள் இயக்குனர் கவர்னராகவருகிறாராம். அதுவும் திமுகவின் ஏற்பாடாம். கதை விடுகிறது அதிமுக. கவர்னரை மாற்றக் கூடாது என்று தடுத்திடஅதிமுக எம்.பிக்கள் டெல்லிக்கு ஓடுகிறார்கள்.

அதாவது கவர்னருக்குப் பின்னால் ஒளிந்திருந்த அரசியல் பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது.எங்கப்பன் குதிருக்குள் இல்ல கதையாகிவிட்டது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று நாட்டுக்கு தியாகம் செய்த தியாகிகளை அழைத்து உபசரித்து கெளரவிக்கவேண்டிய கவர்னர் ஒலிம்பிக்ஸ் பார்க்க போய் விடுகிறார். இந்த நிலையில் இவர்கள் (அதிமுக) போய் இந்தகவர்னருக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குவது ஏன் என்று ஜனாதிபதி யோசிக்க மாட்டாரா?

குடியரசுத் தலைவர் சட்டசபைக்கு வந்து உரையாற்றும் முன் அவரது பார்வைக்கு மரியாதையுடன் சிலசந்தேகங்களுக்கான விளக்கம் பெற வேண்டிய கேள்விகள்:

மாட்சி தாங்கியவரே, தாங்கள் வந்து பேசப் போகும் தமிழக சட்டமன்றப் பேரவை இந்த ஆண்டு முழுவதுக்கும்சேர்த்தே வெறும் 15 நாட்கள் மட்டுமே நடைபெற்றதை அறிவீர்களா?

பட்ஜெட் மீதான விவாதத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்து ஜூலை கடைசிவாரம் வரை அவை கூட்டப்படவில்லை என்பதை அறிவீர்களா?

சட்டசபைக் கூட்டத் தொடரை குறுகிய காலம் நடத்தக் கூடாது என்று கோ சட்டசபை ன்பு எதிர்க்கட்சிஎம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதும், இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு பாதிவழியிலேயே போலீசாரால் இறக்கி விடப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட செயல் தங்கள் கவனத்துக்கு வந்ததா?

முன்னாள் சிபிஐ இயக்குனர் தமிழக எதிர்க் கட்சிகளை சந்தித்து ஆளுநராக முயல்வதாக பத்திரிக்கைகளில் செய்திவந்துள்ளது. அதை வைத்துக் கொண்டு ஆளுநரை மாற்ற திமுக நெருக்கடி தருவதாக அரசு கூறுகிறது. அது குறித்துவிசாரித்து அறியும் இடத்தில் உள்ள தாங்கள், அதிமுக மனுவில் தந்துள்ள விவரம் எந்த அளவுக்கு உண்மைஎன்பதை விசாரித்த்துத் தெரிந்து கொள்ளுங்ள்.

கவர்னராக இருந்த பாத்திமா பீவி மிரட்டப்பட்டார், அவர் இடமாற்றம் செய்யப்பட திமுக தான் காரணம் என்றுஅதிமுக குற்றம் சாட்டுகிறது. ஒரு பெண் என்பதாலும், இஸ்லாமியர் என்பதாலும் பாத்திமா பீவியைஆளுநராக்கலாம் என்று அப்போதைய மத்திய அரசுக்கு யோசனை சொன்னதே திமுக தான். இதை நானும்நீங்களும் நன்கறிவோம். அல்லா மீது நம்பிக்கை கொண்ட பாத்திமா பீவி அம்மையாரும் நன்கறிவார்.

மேலும் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது 4 அதிகாரிகள் தனி விமானத்தில் தமிழகம் வந்து மாநில அரசைமிரட்டினார்கள் என்று அதிமுக தங்களிடம் தரப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டது. அது குறித்து அப்போதைய பாஜகஆட்சியினர் தான் விளக்கம் தர வேண்டும்.

தமிழக அரசின் அழைப்பை ஏற்று சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்ற வரும் முன் இவை அனைத்தையும்உரியவர்களிடம் முழுமையாக விசாரித்து விட்டு வாருங்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வேடிக்கையா இருக்கு- வாசன்

இந் நிலையில் ஆளுநர் விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் அரசியல் செய்வதாக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக ஆளுநரை மாற்றக் கூடாது என்று கோரி குடியரசுத் தலைவரிடம்அதிமுக எம்பிக்கள் மனு கொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது. அதிமுக எம்.பிக்கள் குழுவுடன் சபாநாயகர்காளிமுத்துவும் இணைந்து சென்றது அதைவிட கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக அமைச்சரவையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதும், அமைச்சர்களை நீக்குவதும், பிறகு சேர்ப்பதும்ஒரே வேடிக்கையாக உள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X