• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையை தொட்டார் வைகோ

By Staff
|

சென்னை:

நடைபயணம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னைக்கு அருகே உள்ளசிங்கபெருமாள் கோவிலில் தொண்டர் படை அணிவகுப்பை சீருடை அணிந்து பார்வையிட்டார்,தொண்டர்களுடன் கைப்பந்தும் விளையாடி அப்பகுதி மக்களைக் கவர்ந்தார்.

நெல்லையிலிருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோ சென்னையை நெருங்கி விட்டார். 15ம் தேதி அவர்சென்னைக்குள் நுழைகிறார்.

சென்னை அருகே உள்ள சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்துள்ள அவர் அங்கு மதிமுக தொண்டர் படையின்அணிவகுப்பை, தலையில் தொப்பி, குளிர் கண்ணாடி, சீருடை அணிந்து பார்வையிட்டார்.

இந்த அணிவகுப்பை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பார்வையிட்டனர். பின்னர் தொண்டர் படையைச் சேர்ந்தசிலருடன் சேர்ந்து அணி அமைத்து, உள்ளூர் அணி ஒன்றுடன் வைகோ கைப்பந்து விளையாட்டிலும் ஈடுபட்டார்.

வைகோவின் பேரனும், பேத்தியும் சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்திருந்து தங்களது தாத்தாவுடன் கொஞ்சிவிளையாடினர்.

பின்னர் செய்தியாளர்களுடன் வைகோ பேசுகையில், சட்டசபைத் தேர்தலிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிமாபெரும் வெற்றி பெறும். திமுக தலைமையில் இதே கூட்டணி நீடிக்கும்.

எனது நடைபயணத்திற்கு பொதுமக்கள் மிகப் பெரும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். இதை நான்எதிர்பார்க்கவில்லை. வருகிற வழியில் பல வயதான தம்பதிகளை சந்தித்தேன். அவர்களில் பலரும்தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு நிற்பதை அறிந்தேன்.

பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிடும் போக்கு நம் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துவருவது வேதனைக்குரிய விஷயம்.

சேது சமுத்திரத் திட்டத்தில் நம் எல்லோருக்கும் பங்குண்டு, ஊர் கூடி தேர் இழுத்த மாதிரி என்றுகருணாநிதி கூறியிருப்பது நேர்மையான கருத்து.

ஆனால், இதற்கு நானே காரணம் என்று பீற்றிக் கொள்ளும் ஜெயலலிதா, இத் திட்டத்துக்கு ரூ. 2,000கோடியை அறிவித்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுவரை ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.இது தான் ஜெயலலிதா. சேது சமுத்திரத் திட்டத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும்கிடையாது.

மதிமுகவின் புதிய திட்டங்களை, செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்அறிவிக்கவுள்ளேன் என்றார் வைகோ.

வாசன் வாழ்த்து:

இன்று 40- வது நாள் நடைபயணத்தை தொடங்கிய வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்,மறைமலைநகர் போர்டு கார் தொழிற்சாலை அருகில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

வைகோ வாசனுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் வைகோவுடன் பேசியவாறு வாசன் 10 நிமிடங்கள் நடந்துவந்தார். அவருடன் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ்பிரமுகர்கள் வந்திருந்தனர்.

Vaikoபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன் கூறியதாவது:

மறுமலர்ச்சி நடைபயணம் வெற்றியடையும் தருவாயில் வைகோவை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவைகோவிற்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாக இந்த நடைபயணம் வைகோவுக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளதுஎன்றார்.

பின்னர் வைகோ பேசுகையில்,

1994-ம் ஆண்டு முதன் முறையாக எழுச்சி நடைபயணம் மேற்கொண்ட போது மறைந்த ஜி.கே.மூப்பனார் சேலம்அருகில் என்னை சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இன்று அவரது மகன் வாசன்,எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் என்னையும், எனது தொண்டர் படையையும் சந்தித்து வாழ்த்துதெரிவித்துள்ளனர்.

இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கூட்டணியைக் காண மூப்பனார் இல்லையே என்ற வருத்தத்தையும்ஏற்படுத்தியுள்ளது என்றார்.

திருமாவளவன் வாழ்த்து:

இதன் பின்னர் வைகோவை விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் சந்தித்துமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்டி.கே.ரங்கராஜன், சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வைகோவுக்குத் தடை:

இந் நிலையில் போக்குவரத்தைக் காரணம் காட்டி சென்னை மாநகருக்குள் நடைபயணம் மேற்கொள்ள மாநகரக்காவல் தடைவிதித்து உள்ளது.

இதுபற்றி வைகோ கூறுகையில், என் அரசியல் வாழ்வில் எத்தனையோ தடைகளை சந்தித்தவன் நான்.அவற்றையெல்லாம் கடந்து தான் முன்னேறி உள்ளேன். இப்போது விதிக்கப்பட்ட தடையையும் சந்திப்பேன்என்றார்.

இன்று மாலை தாம்பரம் வரும் வைகோ இரவு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X