காக்கா கூட்டம்: திரையுலகினர் மீது கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
தமிழ்த் திரையுலகுக்கு சலுகைகள் அறிவித்த ஜெயலலிதாவை பாராட்டி பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்ததிரைத் துறையினரை காக்கா கூட்டம் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.இதையடுத்து நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத் துறையினர் பலரும் முதல்வரைப்பாராட்டி கருத்து தெரிவித்தனர்.
திரைத் துறையின் பல்வேறு சங்கங்களும் ஜெயலலிதாவைப் பாராட்டி பத்திரிக்கைகளில் விளம்பரங்களும்கொடுத்தன. இதை கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.
சென்னையில் ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அண்ணாதுரையால் 1967ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரைஒரு ஆண்டு கூட விடாமல் ஏழை, எளிய சிறுவர், சிறுமியருக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறது.
ஆனால் இந்த ஆண்டுக்குரியதை அடுத்த ஆண்டுக்கு கொடுப்பதெல்லாம் (3 ஆண்டுக்குரிய திரைப்படவிருதுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு வழங்கியதை குறிப்பிடுகிறார் கருணாநிதி) நாட்டில் நடக்கிறது.அதுக்கும் காக்கா கூட்டம் (தமிழ்த் திரையுலகினர்) ஆஹா ஆஹா என்று நன்றி கூறி பக்கம் பக்கமாக விளம்பரம்கொடுக்கிறது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications