For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுக்கு எதிரான ரஷிய நிறுவன மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் டெண்டரை தங்களுக்கு வழங்க தமிழக அமைச்சர் லஞ்சம் கேட்டதாக ரஷியநிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் வழக்குத்தொடர்ந் ரஷிய நிறுவனத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

சென்னை மீஞ்சூர் அருகே ரூ. 1,750 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசுசெயல்படுத்த முடிவு செய்ததது. இதற்கான டெண்டரும் விடப்பட்டது. ரஷியாவைச் சேர்ந்த குர்னிச்சேவ் ஆய்வுநிறுவனம் டெண்டர் கோரி விண்ணப்பித்தது.

இந்த நிறுவனத்திடம் முதலில் திட்டத்தை அமலாக்கும் பொறுப்பை வழங்கிய தமிழக அரசு பின்னர் அந்தடெண்டரை ரத்து செய்துவிட்டது.

இதையடுத்து குர்னிச்சேவ் நிறுவனம் சார்பில் சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் ஏஜென்டான பர்ஸ்ட்பிளான்ட் என்ஜீனியங் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் திருவிக்கிரமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ஏற்கனவே ரஷிய நிறுவனத்திற்கு விடப்பட்ட டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது சட்டவிரோதமானது.இந்த டெண்டரை மீண்டும் ரஷிய நிறுவனத்திற்கே வழங்க வேண்டுமானால் லஞ்சம் தர வேண்டும் என்று தமிழகஅதிகாரிகளும், சில அமைச்சர்களும் நிர்பந்தம் செய்தனர்.

எனவே தமிழக அரசு மறு டெண்டர் விட்டதை ரத்து செய்து விட்டு மீண்டும் ரஷிய நிறுவனத்திற்கே இந்தடெண்டரை விட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தினகர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,ரஷிய நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், அரசை மிரட்டுவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கடுமையாக சாடினர்.

பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. அரசை மிரட்டி தங்களுக்குசாதகமாக இந்தத் திட்டத்தைக் கையகப்படுத்தும் நோக்கத்தில்தான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகண்டனத்துக்குரியது.

தேவையில்லாமல் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்ததன் மூலம், மக்களுக்கு மிகப் பெரும் பலனை அளிக்கக்கூடிய இத் திட்டத்தை மனுதாரர் தாமதப்படுத்தி விட்டார். சென்னையில் வசிக்கக் கூடிய மனுதாரர், சென்னையில்நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை மனதில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரரின் இந்த மனு துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது. பொய்யான இந்த வழக்கை தள்ளுபடிசெய்வதோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை உயர் நீதிமன்றப் பதிவாளர் பெற்று, இலவச சட்ட மையத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றுநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் சார்பில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றவுள்ள மெட்ரோ வாட்டர் நிறுவனம், தங்களது தரப்புசாட்சியாக வீடியோ டேப்புகள், அரசுக்கும்- ரஷிய நிறுவனத்திற்கும் இடையே நடந்த உரையாடல்களின் ஆடியோபதிவுகள் உள்பட வலுவான ஆதாரங்களை தாக்கல் செய்திருந்தது.

ஆனால், அமைச்சர்கள் லஞ்சம் கேட்டதாகவும், ரஷியாவுக்கும் ரஷ்ய தூதரகத்துக்கும் போன் செய்து அதிகாரிகள்லஞ்சம் கேட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்த அந் நிறுவனம் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யத்தவறிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X