For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் உடலை எரிக்க சொன்ன போலீஸ்: புதைத்த குடும்பத்தினர்

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

Veerappans wife Muthulakshmiசந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் இன்று மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அதிகாலையில்புதைக்கப்பட்டது. அவரது உடலை எரிக்குமாறு அதிரடிப்படையினர் கூறியபோதும் அதை வீரப்பனின்உறவினர்கள் ஏற்கவில்லை.

வீரப்பனின் சொந்த ஊரான கொள்ளேகாலில் அவனது உடலைப் புதைக்கவோ, எரிக்கவோ போலீசார் அனுமதி தரமறுத்துவிட்டது. இதனால் 10 மணி நேர இழுபறிக்குப் பின் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் ஊரானமூலக்காட்டில் அவனது உடல் புதைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் மற்றும் அவனதுகூட்டாளிகளின் உடல்கள் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. வீரப்பனின் உடலை அவரது மனைவிமுத்துலட்சுமி வாங்க மறுத்தார். தனக்கு இழப்பீடு வழங்கப்பட்டால்தான் உடலை வாங்குவேன் என்று கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவரிடம் நீண்ட நேரம் பேசியதையடுத்து உடலைப் பெற்றுக் கொள்ள முன் வந்தார்.உடலை முத்துலட்சுமி அழுது அரற்றியவாறு பெற்றுக் கொண்டார்.

உடலை வீரப்பனின் சொந்த ஊரான கொள்ளேகாலுக்கு கொண்டு செல்ல சேலம் மாவட்ட எஸ்.பி. பொன்மாணிக்கவேல் அனுமதி தர மறுத்துவிட்டார். வேறு ஊரில் தான் எரிக்க வேண்டும் என்றார். இதனால் நீண்ட நேரம்வாக்குவாதம் நடந்தது.

கடைசியில் வேறு வழியின்றி வீரப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் முத்துலட்சுயின் ஊரான மூலக்காடுகிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆயுதம் தாங்கிய போலீசார் ஆம்புலன்ஸை தொடர்ந்து சென்றனர்.

நேற்றிரவு 8 மணியளவில் மூலக்காடு வந்து சேர்ந்த உடலைப் பார்த்ததும் குழுமியிருந்த வீரப்பனின் உறவினர்கள்,கிராமத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வீரப்பன் உடலைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

தடுத்து நிறுத்திய போலீஸ்:

ஆனால் கிராம எல்லையிலேயே வீரப்பனின் பிணம் வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடலைவீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இப்படியே மயானத்திற்குக் கொண்டு போய் எரித்து விடுங்கள் என்றுஅவர்கள் உத்தரவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி போலீஸாருடன் கடுமையாக வாதாடினார். கிராம மக்களும்வாதாடியபோதும் போலீசார் செவி சாய்க்கவில்லை.

வந்தார் கொளத்தூர் மணி:

இந் நிலையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகதலைவர் சுகுமாறன் ஆகியோர் வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவருடன் அங்கு வந்தனர்.

அவர்கள் வீரப்பன் குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பேசினர். போலீசாரிடம் கொளத்தூர் மணி பேசுகையில்,

வீரப்பனை சுட்டுக் கொன்றதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது. அவரது உடலை எரிப்பதா புதைப்பதாஎன்பதை அவரது குடும்பம் முடிவு செய்யும். எதிர்காலத்தில் வழக்கு, விசாரணை வந்தால் உடலை மீண்டும்தோண்டியெடுக்க வசதியாக புதைக்கத்தான் போகிறோம். எரிக்க மாட்டோம்.

வீரப்பன் குடும்ப குல வழக்கப்படி பகலில்தான் பிணத்தை அடக்கம் செய்வார்கள். எனவே போலீஸார் அதைத்தடுக்கக் கூடாது என்று கடுமையாக வாதாடினார் மணி. இதையடுத்து போலீசார் அமைதியாகினர்.

ஓடி வந்த பொன்.மாணிக்கவேல்:

ஆனாலும் பிணத்தை கிராமத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

Veerappans sister Muniammaஇந் நிலையில் அங்கு வந்த சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலுடன் வீரப்பன்குடும்பத்தினரும், கொளத்தூர் மணியும் பேசினர். உடலை எரிக்குமாறு மாணிக்கவேல் கூறியதை கொளத்தூர் மணிஏற்கவில்லை. அதே போல கிராமத்துக்குள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மணியின்கோரிக்கையை மாணிக்கவேல் ஏற்கவில்லை.

இதையடுத்து பிணத்தை அங்கேயே வைத்திருந்து விட்டு காலையில் அடக்கம் செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கிராம எல்லையிலேயே சுமார் 10 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

அண்ணன் தோட்டத்தில் உடல் புதைப்பு:

இதையடுத்து இன்று காலை 6.30 மணியளவில் வீரப்பனின் அண்ணன் மாதையனுக்குச் சொந்தமானதோட்டத்திற்கு அருகே உள்ள இடுகாட்டில் வீரப்பனின் உடல் புதைக்கப்பட்டது.

உடலை மூலக்காடு மயானத்தில் எரிக்குமாறு போலீசார் கூறியதை அவனது குடும்பத்தினரும் கொளத்தூர் மணியும்ஏற்கவில்லை. கோவை சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள மாதையன் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, மகள்கள் வித்யாராணி, பிரபா, அக்காள் முனியம்மாஉள்பட நூற்றுக்கண்காகனவர்கள் கலந்துகொண்டனர். மயானத்திலும் மூலக்காடு கிராமத்திலும் ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்,

சேத்துக்குளி உடல் எரிப்பு:

முன்னதாக வீரப்பனின் கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தனின் உடல் மூலக்காடு அருகே உள்ள கோரப்பள்ளம்என்ற இடத்தில் நேற்று இரவு 8 மணிக்கு எரியூட்டப்பட்டது.

தமிழ்த் தேசிய தீவிரவாதியான சேதுமணியின் உடல் அரியலூர் மாவட்டம் காட்டம்பாடி கிராமத்தில் இன்றுஅதிகாலை 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

மற்றொரு கூட்டாளியான சந்திரே கெளடாவின் உடல் சத்தியமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.

நீதி விசாரணை கோரிக்கை:

வீரப்பன் கொல்லப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார். ராஜ்குமார் மீட்பில் வீரப்பனுடன் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு உறுதுணையாய் இருந்தவர் மணி.

வீரப்பனின் உடல் அடக்கத்திற்குப் பின் அவரும், வழக்கறிஞர் சந்திரசேகரும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,வீரப்பன் மரணம் எப்படி நேர்ந்தது என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. போலீஸ் சொல்லும் விவரம் சரியாகஇல்லை.

வீரப்பன் தற்கொலை செய்து கொண்டதாக பேச்சு அடிபடுகிறது. வீரப்பனை திட்டமிட்டுப் பிடித்தாக போலீஸார்கூறுகிறார்கள். அப்படியென்றால் அவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஏன்கொன்றார்கள்?. இதனால் நீதி விசாரணை அவசியமாகிறது என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X