ஜெ. வெளியிட்ட தமிழ் சினிமா வரலாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல திரைப்பட மக்கள் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய, சாதனை படைத்த தமிழ் சினிமா வரலாறு என்ற நூலைமுதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

பழம்பெரும் திரைத்துறை ஆர்வலரான பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமா தொடர்பான அத்தனை தகவல்களையும் தொகுத்துவைத்துள்ளார். இவரிடம் இல்லாத தமிழ் திரையுலகம் தொடர்பான புகைப்படங்களோ, விவரங்களோ இல்லை என்றும் கூறலாம்.

தமிழ் சினிமா குறித்த கலைக் களஞ்சியமாகத் திகழும் இவர், சாதனை படைத்த தமிழ் சினிமா வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். முதல் பிரதியை திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்துவைத்தார் ஜெயலலிதா. அதில், புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்திற்கான கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.

கடற்கரையில் உள்ள மாநராட்சிக்குச் சொந்தமான இந்த அண்ணா நீச்சல் குளத்தை ஜெயலலிதா கடந்த 19ம் தேதி திறப்பதாக இருந்தது.ஆனால் மழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே நீச்சல்குளத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார்(!).

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+