For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவாரம், நடராஜையும் கெளவரப்படுத்த முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படையினருக்கு சென்னையில் நடக்கவுள்ள பாராட்டு விழாவின்போது முன்னாள்அதிரடிப்படைத் தலைவர்கள் வால்டேர் தேவாரம், கூடுதல் டிஜிபி நடராஜ் உள்ளிட்ட மேலும் சிலஅதிகாரிகளையும் கெளரவப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படையினரின் செயலைப் பாராட்டும் விதமாக அதிரடிப்படையில் இடம் பெற்றுள்ளகூடுதல் டிஜிபி விஜயக்குமார் முதல் சமையல்காரர் வரை மொத்தம் உள்ள 752 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம்ரொக்கப் பரிசு, ஒரு படி பதவி உயர்வு, விரும்பிய இடத்தில் வீட்டு மனை ஆகிய பரிசுகளை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார்.

மேலும், சென்னையில் வருகிற 30ம் தேதி அதிரடிப்படையினருக்கு பாராட்டு விழாவையும் அவர் ஏற்பாடுசெய்துள்ளார். இந் நிலையில் தமிழக அரசின் முடிவு காவல் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.வீரப்பனைப் பிடிக்க பல வகையான வழிகளில் முயன்று, அவனுடைய பலத்தைக் குறைத்த பல முன்னாள்அதிகாரிகள் அரசால் புறக்கணிக்கப்படுவதாக காவல்துறையில் கிசுகிசு கிளம்பியது.

இதைத் தொடர்ந்து 752 பேரைத் தவிர மேலும் பல அதிகாரிகளும் சென்னை விழாவின்போதுபாராட்டப்படவுள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் அதிரடிப்படை எஸ்.பியும், தற்போது விழுப்புரம் டிஐஜியாகஉள்ளவருமான சஞ்சய் அரோரா, சேலம் டிஐஜி தமிழ்ச் செல்வன் ஆகியோர் முக்கியமான அதிகாரிகளில் சிலர்.

இவர்களில் சஞ்சய் அரோராவும், தமிழ்ச் செல்வனும் வீரப்பனுடன் நேருக்கு நேர் சண்டையிலும் ஈடுபட்டவர்கள்.மேலும், வீரப்பன் கும்பலை பலம் இழக்க வைத்தவர்களில் முக்கியமானவர்கள்.

இவர்களுக்கெல்லாம் மேலாக வால்டேர் தேவாரம், தற்போதைய சென்னை மாநகர ஆணையர் நடராஜும்வீரப்பன் கும்பல் தேய முக்கியக் காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள்.

முதல் முறையாக1993ம் ஆண்டு தமிழக அதிரடிப்படை அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக தேவாரம்நியமிக்கப்பட்டார். அப்போது அவர் தனது முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. இதைத் தொடர்ந்துஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது 2001ம் ஆண்டு தேவாரம் மீண்டும் வீரப்பன் வேட்டையில்ஈடுபடுத்தப்பட்டார்.

இருப்பினும் இரண்டாவது முயற்சியிலும் தேவாரத்தால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் வீரப்பன் கும்பலில்நிறைய ஆட்கள் இருந்ததை குறைத்த பெருமை தேவாரத்திற்கு உண்டு.

அதன் பின்னர் நடராஜ் அதிரடிப்படைத் தலைவராக இருந்தபோதும் வீரப்பன் வேட்டையில் கணிசமானமுன்னேற்றம் காணப்பட்டது. வீரப்பன் கும்பலை 5 பேர் கொண்ட குழுவாக மாற்றிய பெருமை நடராஜுக்கு உண்டு.மேலும், வீரப்பனுக்கு ஆதரவாக இருந்து வந்த கிராமத்து மக்களை அதிரடிப்படைக்குச் சாதகமாக திருப்புவதிலும்நடராஜ் வெற்றி கண்டார்.

இவர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் நடந்து சென்றுதான் விஜயக்குமாரும், மற்ற அதிரடிப்படையினரும்தற்போது வீரப்பனை வீழ்த்தியுள்ளனர். எனவே விஜயக்குமாரைப் பாராட்டும்போது இந்த அதிகாரிகளையும்பாராட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தேவாரம் பேட்டி:

இதற்கிடையே, விஜயக்குமாரின் திறமையை தேவாரம் புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் மிகவும் பொறுமைசாலி, திறமையான அதிகாரி என்பதால்தான் அவருக்கு இந்தவெற்றி கிடைத்துள்ளது. எனக்கு அந்தளவிற்கு திறமையோ பொறுமையோ கிடையாது என்பதுதான் உண்மை.

வீரப்பன் சுமார் 8 அல்லது 9 கோடி ரூபாயை காட்டுக்குள்தான் புதைத்து வைத்துள்ளான். அது எங்கு புதைத்துவைக்கப்பட்டுள்ளது என்பது வீரப்பனுக்கும், சேத்துக்குளி கோவிந்தனுக்கும் மட்டும்தான் தெரியும். வீரப்பனின்கூட்டாளியான சந்திரகெளடாவையாவது அதிரடிப்படையினர் உயிருடன் பிடித்து இருந்தால் வீரப்பன் பற்றி பலமுக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்து இருக்கும் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X