For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயக்குமாரின் பாதயாத்திரை: மார்க்சிஸ்ட் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி. விஜயக்குமாரின் பாதயாத்திரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் வரதராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டதையொட்டி பன்னாரி அம்மன் கோயிலிருந்து நடைப்பயணமாக35 கி.மீ. தூரம் நடந்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரப்போவதாக விஜயக்குமார் அறிவித்திருக்கிறார்.இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விஜயக்குமார் என்ற தனிமனிதரின் வழிபாட்டு உரிமையை யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். ஆனால் அரசுஎந்திரத்தின் தலைமைப் பொறுப்பேற்ற ஓர் அதிகாரி, அரசுப் பதவியில் அரசாங்கக் கடமையாற்றிய பணிக்காககுறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டு நடவடிக்கையில் இறங்குவது, தான் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்றதன்மையிலிருந்து மீறுவதாகும்.

மேலும் இவ்வாறு ஒரு வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுவது மக்களிடம் ஒரு மாயக் கருத்தை உருவாக்கமுயல்கிறார் எனக் கருத இடமளிக்கும். இதன் மூலம் தமிழக முதல்வரை திருப்தி செய்ய நினைக்கிறார் என்றசந்தேகமும் எழ வாய்ப்புள்ளது.

ஓர் அரசு எந்திரத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தனது திறமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.இவ்வாறு மூட நம்பிக்கையை வளர்க்க முயல்வது காவல்துறையின் கெளரவத்தை குறைக்கும் செயலாகும் என்றுகூறியுள்ளார்.

விஜயக்குமாருக்கு பத்மஸ்ரீ?:

இதற்கிடையே விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யதிட்டமிட்டுள்ளது.

வீரப்பனையும் அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினர் அனைவருக்கும் பதவி உயர்வுவழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்றவர்களுக்குஇதுவரை எந்த மாநிலத்திலும், பதவி மூப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கியது கிடையாது. இப்பதவி உயர்வுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய உள்துறைக்கு மட்டுமே உள்ளது.

விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசுமுடிவெடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X