For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை, நாக்பூர் & டெல்லி:

காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருப்பது நாட்டுக்கும், கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.

அக் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் பேசுகையில்,

இவ்வளவு அவசரமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. அவரது கைது பா.ஜ.கவுக்கும் நாட்டுக்கும்பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அவரைக் கைது செய்து தான் விசாரிக்க வேண்டுமா?. நாட்டின் தர்ம குருவை போலீசார் கைதுசெய்துள்ள அதே நேரத்தில் பல கிரிமினல்கள் சுதந்திரமாக நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இந்து விரோத நடவடிக்கை- தொகாடியா

நாக்பூரில் செய்தியாளர்களிடம் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியதாவது:

தமிழகம், ஆந்திரம், கர்நாடக ஆகிய மாநிலங்களின் அரசுகளும் மத்திய அரசும் சேர்ந்து செய்துள்ள சதி இது. இந்துக்களின்சங்கராச்சாரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தீபாவளியன்று திரிகல் பூஜை நடத்திக் கொண்டிருந்த ஒருசாது திடீரென அநாவசியமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜும்மா மசூதியின் தலைவர் இமாம் புகாரி மீது கூட பல வழக்குகள் உள்ளன. அவரை ரம்ஜான் தினத்தன்று கைது செய்வார்களா?

அரசியல் பழிவாங்கும் செயலில் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன. இதைக் கண்டித்து நாளை முதல் இரு தினங்களுக்குநாடு முழுவதும் வி.எச்.பி. போராட்டம் நடத்தும் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு:

ஆர்.எஸ்.எஸ்சின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்தக் கைது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவரைக் கைது செய்திருக்கவே தேவையில்லலை. விசாரணையை அவரிடம் மடத்தில் வைத்தேநடத்தியிருக்கலாம். இந்து மதத்தின் முக்கியத் தலைவர் அவர். முக்கியமான மடாதிபயான அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

அவரை உடனே சிறையில் இருந்து வெளியில் எடுக்கும் வேலைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். மடத்தின் செயல்பாட்டை இந்து விரோதஅமைப்புகளும் சமூக விரோதிகளும் தடுக்க முயல்கின்றனர். இதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

இந்த சிக்கலான நேரத்தில் காஞ்சி மடத்துக்கு ஆதரவாக இந்துக்கள் திரள வேண்டும் என்றார்.

கைதுக்கு ஆதரவு:

இந்தக் கைது நடவடிக்கையை கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் குடும்பத்தினரும் உறவினர்களும் வரவேற்றுள்ளனர். அதே போல தமிழகத்தின் பலகட்சிகளும் முக்கியஸ்தர்களும் இந்த கைது நடவடிக்கையை ஆதரித்துள்ளனர்.

திருமாவளவன்:

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், சட்டத்தின் ஆற்றல் மீது பொது மக்களுக்கு நம்பிக்கையைஅதிகரிக்கச் செய்துள்ளது இந்த நடவடிக்கை. காவல்துறையின் நடவடிக்கை மிகச் சரியானது, பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி:

திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறையிரின் நடவடிக்கை மிகவும் துணிச்சலானது, சட்டத்தின் முன் அனைவரும்சமம் என்பதை தமிழக காவல்துறை மீண்டும் நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளார்.

சாருஹாசன்:

நடிகரும் கமலஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் கூறுகையில், வீரப்பனாக இருந்தாலும், சங்கராச்சாரியாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் ஒன்றேஎன்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

மோசடிப் பேர்வழிகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும் இது. இந்தத் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், முடிவெடுத்தமுதல்வருக்கும் எனது பாராட்டுக்கள் என்றார்.

உறவினர்கள் வரவேற்பு:

சங்கரராமன் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் 2 மாதத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவரது உறவினர்கள் வரவேற்பும்,காவல்துறைக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளனர். ஜெயேந்திரர் கைது குறித்து அவரது உறவினர் கண்ணன் கூறுகையில்,

நாங்கள் அப்போதிருந்தே சங்கர மடத்திற்கும், இந்தக் கொலைக்கும் தொடர்பு உள்ளதாக கூறி வந்தோம். இந்த நிலையில் கொலை நடந்து 2மாதத்திற்குள் உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளதை வரவேற்கிறோம்.

போலீஸார் மிகவும் உறுதியாக இருந்து இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்றார். இதே கருத்தையே சங்கரராமனின் பிறஉறவினர்களும் தெரிவித்தனர்.

வெடி போட்டு மகிழ்ச்சி:

சங்கராச்சாரியாரின் கைதை காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பு வெடி போட்டு கொண்டாடியது. இந்தக் கொலையில் சங்கராச்சாரியாருக்குத்தொடர்புள்ளதாக பலவித போராட்டங்களை நடத்திய அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் நம்பிக்கை:

ஜெயலட்சுமி விவகாரத்தில் நாறிப் போய் கிடந்த காவல்துறை வீரப்பனைக் கொன்றதன் மூலம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டது.

இப்போது இந்தக் கைது மூலம், இழந்த மரியாதையில் மீதியையும் மேலும் தங்களுக்கு நிச்சயம் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என அந்தத் துறையின்பெரும்பாலான அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X