பாஜக: நம்பியார் மகனுக்கு புது பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாஜக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறனுக்கு அக் கட்சியில் புதிய பதவிகொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைப் பூர்வீகமாக் கொண்ட சுகுமாறன் பாஜக பொருளாளராக இருந்து வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட பா.ஜ.க சார்பில் முன்னின்று முயற்சி மேற்கொண்டவர் இவர் தான்.
சமீபத்தில் அத்வானி புதிய தலைவராக பதவியேற்ற பின்னர் நடந்த நிர்வாகிகள் மாற்றத்தின்போது சுகுமாறன் நம்பியாரின் பதவிபறிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன் காக்கும் பா.ஜ.க. அணியின் இணை அமைப்பாளராகவும், தொழிலாளர்அணியின் தேசிய அமைப்பாளராகவும் சுகுமாறன் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரு பதவிகளும் ஒப்புக்கு சப்பாணி அதிகாரம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications