ஜெயேந்திரரை சந்திக்க ராம.கோபாலனுக்கு நோ-பெர்மிஷன்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

Rama Gopalan

நடுரோட்டில் கற்பூரம் பற்ற வைக்கும் ராமகோபாலன்
வேலூர் சிறையில் சங்கராச்சாரியாரை சந்திக்க இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு அனுமதி தரப்படவில்லை.

இதையடுத்து நடு ரோட்டில் அவர் பூஜை செய்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அவரது போராட்டத்தை கொஞ்சம் கூடகண்டுகொள்ளாமல் போலீசார் அவரை மேலும் வெறுப்பேற்றினர்.

முரளிமனோகர் ஜோஷியைத் தொடர்ந்து ஜெயேந்திரரை சந்திக்க வந்தார் ராம. கோபாலன்.

சிறைக்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் சிறை வாயிலேயே அமர்ந்து போராட்டம்நடத்தினார். அவருடன் பல இந்து முன்னணி தொண்டர்களும் போராட்டம் நடத்தினர். இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து தமிழில் சுலோகங்கள் கூறிக் கொண்டே நடு ரோட்டில் கற்பூரம் ஏற்றி பூஜையில் இறங்கினார் ராம.கோபாலன்.இதையும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.

தனது போராட்டத்தை போலீசார் கொஞ்சும் கூட மதிக்காததால் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராம.கோபாலன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+