For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் 3,372 மொழிகள்: 5வது இடத்தில் தமிழ்

By Super
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் 216 மொழிகளை 10,000க்கும் குறைவானவர்களே பேசுகின்றனர் என ராஜ்யசபாவில் கலாச்சாரத்துறை அமைச்சர்ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 1991ம் ஆண்டு சென்சசின் அடிப்படையில் 1,576 மொழிகள் வகுப்புவாரியாக அணிபிரிக்கப்பட்டுள்ளதாகவும், 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டு வரப்படவில்லை.

இவற்றில் 18 மொழிகள் அதிகாரப்பூர்வ அரசு மொழிகள். மீதமுள்ள மொழிகள் வெறும் பேச்சு வழக்கில்மட்டுமே உள்ளன. இவற்றில் பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை என்றார்.

இந்திய மொழிகள்: ஒரு அலசல்

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி விளங்குகிறது. இந்த மொழியைப் பேசுபவர்கள் எண்ணிக்கைஇந்திய மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர்.

48 வகை இந்தி:

இந்தி மொழி 48 விதமாக பேசப்படுகிறது. இப்படிப் பேசுபவர்கள் அனைவரையும் கணக்கில் வைத்துதான் இந்திபேசுபவர்களின் மொத்த எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நவீன இந்தி மொழியைப் பேசுபவர்களின்எண்ணிக்கை 23 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 285 பேர்தான்.

அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது பெங்காலி. (6 கோடியே 95 லட்சத்து95 ஆயிரத்து 738), மூன்றாவது இடத்தில் தெலுங்கு (6 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 615) உள்ளது.

நான்காவது இடத்தில் மராத்தி (6 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 681) உள்ளது.

தமிழுக்கு 5வது இடம்:

செம்மொழி தமிழ் 5வது பெரிய மொழியாக உள்ளது. நாட்டில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியே30 லட்சத்து 6 ஆயிரத்து 368 பேர் ஆகும். இருப்பினும் தமிழ் மொழியை மொத்தம் 4 வடிவங்களில் பேசுவதாககணக்கிட்டுள்ளனர்.

தமிழ், கைகடி, யருகுலா அல்லது யருகாலா மற்றும் பிற வடிவங்களை ஒரே இனமாக சேர்த்து மொத்தம் 4வடிவங்களாக தமிழை வகைப்படுத்தியுள்ளனர். இதில் தமிழ் என்பது தற்போது புழக்கத்தில் உள்ள நவீனத்தமிழாகும். மற்ற வடிவங்கள் மலைவாசிகள், ஆதி தமிழர்கள் பேசுவது.

தற்போதைய நவீனத் தமிழைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 28 லட்சத்து 86 ஆயிரத்து 931 பேர்.கைகடி வகை தமிழைப் பேசுபவர்கள் 21,848 பேர். யருகுலா அல்லது யருகாலா தமிழைப் பேசுபவர்கள் 63,133பேர் ஆவர்.

மற்ற வடிவங்களைப் பேசுபவர்கள் 34,456 பேர். இந்தியாவில் தமிழ் பேசுபவர்களின் சதவீதம் 6.32 ஆகும்.

புதுவையில்தான் அதிக தமிழ்!:

தமிழகத்தை விட குட்டி மாநிலமான புதுவையில்தான் தமிழ் பேசுபவர்கள் சதவீதம் அதிகம் உள்ளது என்பதுசுவாரஸ்யமான ஒரு தகவல்.

புதுவையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை 89.2 சதவீதம். தமிழகத்தில் இந்தசதவீதம் 86.7 ஆகும். குட்டித் தீவான அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தமிழ் பேசுபவர்கள் 19.1 சதவீத அளவில்உள்ளனர்.

கேரள மாநிலத்தில் 2.1 சதவீதம் பேர் தமிழர்கள். வடக்கில் உள்ள சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 0.8 சதவீதம் பேர்தமிழர்கள். லட்சத் தீவுகளில் 0.5 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். கர்நாடகத்தில் தமிழ் பேசுபவர்கள் 4வதுஇடத்தில் உள்ளனர். (உண்மையான தமிழர்களின் எண்ணிக்கையை கர்நாடக அரசு எப்போதும் சரியாகத்தந்ததில்லை).

மற்றொரு பழமையான, செம்மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தை மொத்தமே 49,736 பேர்தான் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 0.01 சதவீதம் ஆகும்.

மொழி "மாறி" மாநிலங்கள்:

இந்தியாவின் சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முக்கிய மொழிகளை விட பிற மொழி பேசுபவர்கள் தான்பெரும்பான்மையானவர்களாக உள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழி நேபாளி ஆகும். 63 சதவீத சிக்கிம் மக்கள்நேபாளிதான் பேசுகிறார்கள்.

திரிபுராவில் அம் மாநில மொழியான திரிபுரியை விட பெங்காலிதான் பெரும்பான்மையான மொழியாக உள்ளது.இங்கு 68.9 சதவீதம் பேர் பெங்காலி பேசுகிறார்கள். திரிபுரி பேசுபவர்கள் வெறும் 23.5 சதவீதம் மட்டுமே.

பஞ்சாப் மாநிலத் தலைநகராகவும், தனி யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில் பஞ்சாபியை விடஇந்திதான் பெரும்பான்மையினர் மொழியாக உள்ளது. 61.1 சதவீதம் பேர் இங்கு இந்தி பேசுகிறார்கள். பஞ்சாபிபேசுவோர் 34.7 சதவீதம்தான். Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X