• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமைதியாக பிறந்த 2005!

By Staff
|

சென்னை:

Marina beach
சுனாமி பேரழிவு ஏற்படுத்திய சோகத்தால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்டம், உற்சாகம், கொண்டாட்டம்இல்லாமல் 2005ம் ஆண்டு பிறந்தது.

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டையும் மிகவும் விமரிசையாக, கோலாகலமாக, கொண்டாட்டமாக, ஆட்டம் பாட்டமாக வரவேற்கும்தமிழக மக்களுக்கு இந்தப் புத்தாண்டு மிகவும் சோகமானதாக மாறிப் போனது.

அமைதியில் ஆழ்ந்த தமிழகம்:

சுனாமி அலைகளின் பேரழிவு ஏற்படுத்திய காயம் மனதை விட்டு மறையாத நிலையில், புத்தாண்டை மிகவும் எளிமையாகவேவரவேற்றனர் மக்கள்.

வழக்கமாக டிசம்பர் 31 நள்ளிரவில் மக்கள் தலைகளால் திணறிப் போகும் மெரீனா கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சாலை, டாக்டர்ராதாகிருஷ்ணன் சாலை என சென்னை நகரின் முக்கிய இடங்களில் இம்முறை மக்கள் கூட்டம் இல்லை.

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி:

மாறாக கையில் மெழுகுவர்த்தியுடன் கடற்கரை காந்தி சிலை முன் ஏராளமான மக்கள் கூடி மாண்டு போன சகோதர, சகோதரிகளுக்குகண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி சிலை முன் ஏராளமான பேர் அமர்ந்து பக்திப் பாடல்களையும், பஜனைப் பாடல்களையும் பாடி இறந்தவர்களின் ஆத்மா சாந்திஅடைய பிரார்த்தித்தனர்.

நள்ளிரவு 12 மணி அடித்தபோது அமைதியான முறையில், புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கடற்கரைச் சாலை நெடுகிலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட உறவுகள், உடமைகளை இழந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கையில்மெழுகுவர்த்தியுடனும், கண்களில் கண்ணீருடனும் நின்றிருந்த காட்சி, பார்ப்போர் மனதை உருக்கிவிட்டது.

கறுப்பு உடைகளில்..

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்தானதால் சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நிலவியது. எங்கும் கொண்டாட்டத்தின் அடையாளமே இல்லை. பலரும் கருப்புச் சட்டை, கருப்புபேட்ஜ் அணிந்து புத்தாண்டு தினத்தன்று சுனாமியால் மறைந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

மும்பை, டெல்லி:

இதே போலவே மும்பை, டெல்லியிலும் பெரும்பாலான கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சில விழாக்கள் நடந்தாலும்பெரும் அளவிலான ஆட்டம், பாட்டம் இல்லாமல் அமைதியாகவே நடந்து முடிந்தன.

சிட்னியில்...

ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் வழக்கமான மாபெரும் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். முன்னதாகஅங்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமியால் பலியானவர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தியதோடு 6.9லட்சம் அமெரிக்க டாலர்களையும் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

தாய்லாந்தின் புக்கெட் நகரில் வழக்கமான இசை, நடன நிகழ்ச்சிகள் ஏதுமின்றி மயான அமைதி நிலவியது.

இந்தோனேஷியாவில் வாணவேடிக்கைகள் உள்பட அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

ஜெர்மனி:

லண்டனில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டப்பட்டது.

ஆனால், ஜெர்மனியில் பெர்லின் நகரில் புத்தாண்டு நிகழ்ச்சி நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது.

இலங்கையில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் மெளன அஞ்சலி நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டன. சிங்கப்பூரில் புத்தாண்டுகொண்டாட்டங்கள் நடந்தன. ஆனால், அவை டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

பாரிஸில் கறுப்பு கொடிகள்:

பாரிஸ் நகரில் மரங்களின் மீது கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, புத்தாண்டு அமைதியாகவே கொண்டாடப்பட்டது.

அதே நேரத்தில் ஜப்பான், தைவானில் வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

அஞ்சலி நாள்:

ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் இன்றைய தின்த்தை அஞ்சலி நாட்களாக அனுஷ்டிக்கின்றன.

முடிந்து போன 2004 தன் கடைசி சில நாட்களில் நம் மீது சோகத்தைத் திணித்துவிட்டுப் போய்விட்டாலும், பிறந்துள்ள 2005ம்ஆண்டாவது மக்களின் வலிகளைப் போக்கட்டும்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X