For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகை, குமரியில் மெதுவாய் திரும்பும் இயல்பு வாழ்க்கை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோயில் & நாகப்பட்டினம்:

Nagai Port

சுனாமியின் பாதிப்புக்குப் பின் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றன.

குமரி மாவட்டத்தில்:

குமரி மாவட்டத்தில் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், விஸ்வநாதன், தளவாய்சுந்தரம். ஜெயராமன் ஆகியோர் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இங்கு 90 சதவீத மீட்புப் பணிகள் முடிவடைந்து விட்டன.

20,000 பேர் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு பயத்தைப் போக்ககவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய்சுந்தரம் கூறினார்.

இதற்கிடையே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள், மீண்டும் கடலுக்குச் சென்று தொழில் தொடங்க விரும்புவதாகத்தெரிவித்துள்ளனர். இவர்களது இடிந்த வீடுகளைக் கட்டித் தர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது இன்னும்தெரியவரவில்லை.

எப்போது இவர்கள் தங்களது சொந்தக் கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதும் தெரியவரவில்லை. இந் நிலையில்பாதிக்கப்பட்டடவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தர அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

4 லட்சம் இலவசப் பாடநூல்கள்:

இந் நிலையில் தமிழகம் முழுவதும் சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ரூ.4.35 கோடி மதிப்பில் இலவசபாட நூல்கள், குறிப்பேடுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 567 பள்ளிக்கூடங்கள் சுனாமி அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்களின்எண்ணிக்கை 2.60 லட்சமாகும். இந்தப் பள்ளிக்கூடங்களைச் சீரமைத்து வரும் 10ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் ரூ.4.35 கோடி மதிப்பில் பாடநூல்கள், குறிப்பேடுகள்வழங்கபடுகின்றன.

சென்னையில் 101 பள்ளிகளைச் சேர்ந்த 8,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிள் 1,000 பேருக்கு,திருவல்லிக்கேணி வெலிங்கடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டது.

ராயபுரம் செயின்ட் ஆன் பள்ளி, அடையாறு அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று இலவசப்பாடநூல்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே கடலூரில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச பாடநூல்களுடன்ஸ்கூல் பேக், பென்சில் பெட்டி, ஜியாமெட்ரிக் பாக்ஸ் ஆகியவற்றையும் வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

600 வீடுகள் கட்டி தரும் விவேக் ஓபராய்:

இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் சுனாமி அலைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினத்தில் 600 வீடுகளைக்கட்டித் தர இந்தி நடிகர் விவேக் ஓபராய் முடிவெடுத்துள்ளார்.

இதற்கு அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத் தருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி உறுதியளித்துள்ளார்.

அதற்கு முன்னதாக தேவனாம்பட்டினம் கிராமத்தில் 170 தாற்காலிக குடிசைகளைக் கட்டித் தரும் பணியில் விவேக் ஓபராய் மற்றும்அவரது குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மீனவர்களின் கவலை:

இந் நிலையில், சுனாமி அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாகை மீனவர்கள், எப்போது தங்களது பழைய வாழ்க்கைக்குத்திரும்புவது என்ற கவலையில் உள்ளனர்.

இந்த மாவட்டத்தில் 82 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முகாம்களில் இடவசதி போதாமல் பலர் பூங்காக்களில்தங்கியுள்ளனர். இவர்களுக்கு எப்போது வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரியாத நிலையில், தங்களது பழைய வாழ்க்கையைத்தொடர மீனவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X