For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவிடம் ஸ்டாலின் ரூ.21 லட்சம் நிதியளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Stalin give the cheque to Jayalalithaமுதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கிய ரூ.21 லட்சத்தை திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின்முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினார்.

ஸ்டாலின் சென்னை கோட்டையில் ஜெயலலிதாவை காலை 11 மணிக்கு சந்தித்தார். கருணாநிதி சார்பில் ரூ.21 லட்சம் நிதியைஜெயலலிதாவிடம் ஸ்டாலின் வழங்கினார். அப்போது, தனது நன்றியை கருணாநிதியிடம் தெரிவிக்கும்படி ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தையும் ஸ்டாலின் முதல்வரிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியிருந்ததாவது:

இயற்கையின் கொடுமைக்கு ஆளான மக்களுக்கு ஆதரவு தர மத்திய-, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள பணிக்கு உறுதுணையாக என்கடமையையும் ஆற்றிடும் வகையில், கண்ணம்மா திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்கு எனக்கு வழங்கப்பட்ட ரூ.10லட்சத்தையும், மண்ணின் மைந்தன் திரைப்படத்துக்கு திரைக்கதை, -வசனம் எழுதுவதற்காக அளிக்கப்பட்ட ரூ.11 லட்சத்தையும் ஆகமொத்தம் 21 லட்சம் ரூபாயை முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று கூறியிருந்தார்.

ஜெயலலிதாவை சந்தித்தபின் வெளியே வந்த ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

கருணாநிதி பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினார்.பின்னர் திமுக சார்பில்வசூலித்த ரூ.20 லட்சம் நிதியை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இப்போது அவர் கதை, வசனம் எழுதியதால் கிடைத்த ரூ.21லட்சத்தை அவர் சார்பில் முதல்வரிடம் வழங்கினேன்.

ஊதியத் தொகை 2 நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது. அது கிடைத்ததும் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இன்று காலை 11மணிக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டது. அதன்படி கருணாநிதியின் மகனாக முதல்-வரைச் சந்தித்து நிதி வழங்கினேன் என்று கூறினார்.

ஸ்டாலினுடன் பரணி குமார் எம்.எல்.ஏ.வும் உடன் சென்றிருந்தார்.

ஒரே நாளில் ரூ.12.70 கோடி நிதியளிப்பு:

இதற்கிடையே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக இன்று ஒரே நாளில் ரூ. 12.70 கோடி அளவுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்குஜெயலலிதாவிடம் நிதி வழங்கப்பட்டது.

இன்று ஜெயலலிதாவை 32 பேர் சந்தித்து ரூ. 12.70 கோடி அளவுக்கு நிதி வழங்கினர். பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் சார்பில் ரூ. 5.1 கோடியும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வளர்மதி, பல்வேறு அரசுத் துறைகள் சார்பாகரூ. 31.5 லட்சமும்,

அதிமுக எம்.பி. பி.ஜி.நாராயணன், துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் சார்பில் ரூ.19.4 லட்சமும், டிஜிபி கோவிந்த் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் ரூ. 2.34 கோடியும் கொடுத்தனர்.

இதேபோல, சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஆணையர் விஜயக்குமார் ஆகியோர் ரூ. 37.15 லட்சம், நடிகர்சிரஞ்சீவி ரூ. 10 லட்சம், சிலம்பரசன் ரூ. 2 லட்சம், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அதிமுக எம்.பி. பி.எச்.பாண்டியன் ஆகியோர் தலா ரூ. 1லட்சம் வழங்கினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X