ஆஸி. ஓபன் டென்னிஸ்: ரோடிக், டேவன்போர்ட் வெற்றி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ஆண்டி ரோடிக், டேவன்போர்ட் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
3வது சுற்றில் உலகின் 2ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் ஆஸ்திரியாவின் ஜர்கன் மெல்ஸரை எதிர்த்து விளையாடினார்.இந்தப் போட்டியில் ரோடிக் 6-2, 6-2, 7-5 என்ற செட்களில் மெல்ஸரைத் தோற்கடித்து 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லேடன் ஹெவிட் 6-2, 4-6, 6-1, 6-4 என்ற செட்களில் அர்ஜென்டினாவின் இக்னசியோசேலாவை வென்றார்.
அர்ஜென்டினா வீரர்கள் கில்லர்மோ கோரியா 6-3, 6-2, 6-1 என்ற செட்களில் ஸ்பெயினின் ஜூவான் கார்லோஸ் பெரேராவையும்,டேவிட் நள்பாந்தியன் 6-7, 7-5, 6-2, 6-3 என்ற செட்களில் சிலியின் பெர்ணான்டோ கான்செலசையும், கில்லர்மோ கேனஸ் 6-1, 6-2, 6-2என்ற செட்களில் செக் குடியரசின் ஸ்டிபனக்கையும் தோற்கடித்து, 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
டிம் ஹென்மேன் தோல்வி:
இதற்கிடையே உலகின் 7ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டிம் ஹென்மேன் 4-6, 2-6, 2-6 என்ற செட்களில் ரஷ்யாவின் நிகோலேடேவிடென்கோவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
டேவன்போர்ட் வெற்றி:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர்ட் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் நிக்கோல்வைடிசோவைத் தோற்கடித்து 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
எட்டாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற செட்களில் இஸ்ரேலின் அன்னஸ்மாஷ்னோவாவை வீழ்த்தினார். ரஷ்யாவின் கஸ்னட்சோவா 6-3, 7-6 என்ற செட்களில் அர்ஜென்டினாவின் மரியானா டியாஸ்ஒலிவாவைத் தோற்கடித்தார்.
தசைப்பிடிப்பு காரணமாக அமெரிக்காவின் லிசா ரேமண்ட் போட்டியில் இருந்து விலகியதால் இவரை எதிர்த்து ஆடவிருந்த ரஷ்யாவின்அனஸ்டாசியா மிஸ்கினா 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications