ஆடிட்டர் வழக்கில் இன்று ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் வாக்குமூலம்
சென்னை:
சங்கரராமன் வழக்கில் அப்ரூவர் ஆகிவிட்ட ரவி சுப்பிரமணியம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் அப்ரூவர் ஆகிறார்.இந்த வழக்கில் இன்று அவர் அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்பிரமணியம், போலீஸாரின் கவனிப்பு காரணமாகஅப்ரூவர் ஆக ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அப்ரூவர் வாக்குமூலம் அளித்தார்.
தஞ்சாவூரில் ஆரம்பித்த சங்கரராமன் கொலைக்கான சதித் திட்டத்தை ஆரம்பித்து மடத்துக்கும் பெண்களுக்குமான தொடர்புகள் வரைஏகப்பட்ட விஷயங்களை கொட்டித் தீர்த்துள்ளார். இதையெல்லாம் போலீஸ் சொல்லச் சொல்லி ரவி கூறிய தகவல்கள் என்கிறது சங்கரமடம்.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அவர் அப்ரூவர் ஆகி போட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்காக இன்று அவர் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
இதன் மூலம் இந்த இரு வழக்குகளிலும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ரவி சுப்பிரணியம் விடுவிக்கப்படவுள்ளார். போலீஸ் தரப்பில்முதல் சாட்சியாக அவர் மாறவுள்ளார்.


