• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்டசபை கூடியது: ஆளுநர் உரை தமிழில் வாசிப்பு!

By Staff
|

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை சபாநாயகர் காளிமுத்து தமிழில்வாசித்தார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூடியது. காலையில் 9.50க்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார்.அதனையடுத்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வந்தார். அவருக்கு காளிமுத்து, சட்டசபை செயலாளர் ராஜாராம் ஆகியோர் பூங்கொத்துகொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ஆளுநரை காளிமுத்து அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்எழுந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர். அதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு பர்னாலா உரை நிகழ்த்தினார். இரண்டாவது முறையாக ஆளுநராகப் பதவியேற்ற பின் பர்னாலா நிகழ்த்தும் முதல் உரைஇது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் சுமார் 50 நிமிடம் நிகழ்த்திய உரையின் பெரும் பகுதியில் தமிழக அரசைப் பாராட்டினார். குறிப்பாக சுனாமி நிவாரணப் பணிகளில்தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாகக் கூறிய அவர் வீரப்பனை ஒழித்துக் கட்டிய அதிரடிப் படையையும் பாராட்டினார். (தமிழக அரசின்உரையை ஆளுநர் படிப்பதே ஆளுநர் உரையாகும். ஆளுநராக இதை எழுதி படிப்பதில்லை. அரசு தருவதை அவர் படிப்பார்.)

ஆளுநர் உரை விவரம்:

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய நிதியைக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் நிரந்தரக்குடியிருப்புகளைக் கட்டித்தரவும், படகுகள் மற்றும் வலைகளை வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதேநேரத்தில் சிறுபடகுகளை வாங்க உதவுவதில் மத்திய அரசு தாராளமாகச் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.

அதேபோல் மீனவர்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை முழு அளவில் மானியமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில்நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், புனரமைப்பு பணிகளில் ஈடுபடவும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு அதிக அளவுநிதியுதவியை எதிர்பார்க்கிறது.

இத்தகைய இயற்கைப் பேரழிவை தமிழகம் சந்தித்ததில்லை. இதன் பாதிப்பு கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக இருந்தது. 7,993 பேர்உயிரிழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் வீடிழந்தனர். மீனவர்கள் தங்களது தொழில் ஆதாரங்களை இழந்தனர்.

இந்தத் தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து பாதிக்கப்பட்ட நாடுகள் மீளும் முன்பு, தமிழக அரசு சிறப்பாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதைபலரும் பாராட்டுகின்றனர். சுனாமியால் இறந்த அநாதை குழந்தைகளுக்கு காப்பீட்டுத் திட்டம் , இளம் பெண்களுக்கு காப்பீட்டுத் திட்டம்,குழந்தைகளுக்கு காப்பகங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்திற்குள் பழைய ரேசன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும். சென்னையில்கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். விரைவில் விற்பனை வரிக்கு பதிலாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டுவரிச் சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் ரூ. 1,500 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். நெசவாளர்களுக்கு உதவும் வகையில் பலதிட்டங்களை தமிழக அரசு அமலாக்கி வருகிறது.

வீரப்பனை ஒழித்துக் கட்டியதும், சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தியதும் சரித்திரம் படைக்கும்சம்பவங்களாகும். வீரப்பன் வேட்டையில் தங்களது வாழ்வை அர்ப்பணித்த அதிரடிப்படையினரை எவ்வளவு பாராட்டினாலும் அதுமிகையாகாது.

சென்னை மாநகரில் கடந்த 2003ம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்தபோது, மிகப் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.இதனால் சென்னை மக்கள் நகரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து ரூ.720 கோடி செலவில் புதிய வீராணம் திட்டத்தைத் தொடங்கி தண்ணீர் பஞ்சத்தை சமாளித்த பெருமை இந்த அரசையேசேரும். பண்ருட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதன் மூலம் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் தண்ணீர்வழங்கப்பட்டது. ஒவ்வொரு தெருவிற்கும் வாரத்தின் ஒவ்வொரு நாளும் குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

வீராணம் ஏரியில் நிரம்பிய பின்னர் கடந்த அக்டோபர் 13ம் தேதி முதல் இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் குடிநீர்வழங்கப்பட்டு வருகிறது.

கோடையில் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் வகையில், ரூ.300 கோடி செலவில் வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கொள்ளிடம்ஆற்றுப்படுகையில் நீர் சேகரிப்புக் கிணறுகளை அமைத்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். சென்னைக்கு நாளொன்றுக்கு 840மில்லியன் தண்ணீர் தேவைப்படுகிறது.

வடசென்னையில் 3 நீர்த்தேக்கங்கள், புதிய வீராணம் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கிருஷ்ணா நதி நீர் ஆகியவறைைக்கொண்டே இந்தக் குடிநீர்த் தேவையை சமாளிக்க முஐயும் என்றார் ஆளுநர்.

தமிழில் உரை வாசிப்பு:

ஆளுநர் தனது உரையை முடித்ததும் அதை சபாநாயகர் காளிமுத்து தமிழில் வாசித்தார்.

ஆளுநர் உரையை தொலைக்காட்சியும் வானொலியும் ஒளி-ஒலி பரப்புவதால், இந்த உரை சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்என்ற காரணத்திற்காக, இந்த உரையை நான் தமிழில் வாசிக்கிறேன் என்று காரணம் கூறினார் காளிமுத்து.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுநர் உரையை தமிழில் வாசிப்பது கைவிடப்பட்டுவிட்டது. கடந்த 25 ஆண்டுகளாககடைபிடிக்கப்பட்டு வந்த மரபு இதுவாகும். தமிழில் உரை வாசிப்பது நிறுத்தப்பட்டதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

இந் நிலையில் இம்முறையும் ஆளுநரின் உரை தமிழில் வாசிக்கப்படாது என்று காளிமுத்து இரு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.இதனால் இப் பிரச்சினையை பெரிதாக்கவும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

ஆனால் அவ்வாறு ஏதும் நேராமல் ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்பட்டதால் சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் எந்தஅமளியும் இன்றி முடிந்தது.

காளிமுத்து பேட்டி:

பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில்எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காளிமுத்து,

சட்டசபைக் கூட்டம் வருகிற 7ம் தேதி வரை நடைபெறும், நாளை இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. முன்னாள்எம்.எல்.ஏக்கள் தீர்த்தகிரி, லட்சுமிகாந்தன், வீரமணி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், சுனாமியால் உயிரிழந்தவர்கள், முன்னாள்அமைச்சர்கள் ராமசாமி, ஆலடி அருணா,

ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில், பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.சுதர்சனம் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

வருகிற 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறுகிறது. 4ம் தேதி ஆளுநர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர்கள்பேசுவார்கள். 5, 6ம் தேதி விடுமுறையாகும். 7ம் தேதி சட்டசபை திமுக தலைவர் பேசுகிறார். அவரது பேச்சுக்கு ஜெயலலிதா பதில்அளிப்பார்.

இந்தக் கூட்டத் தொடர் காலை நேரங்களில் மட்டுமே நடைபெறும். இதில் சில சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். கேள்வி நேரமும்நடைபெறும்.

ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால்தான் தமிழில் வாசிக்கப்பட்டது என்று கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X