For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு தயாராக அதிமுகவினருக்கு ஜெ உத்தரவு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கட்டளையிட்டார். மேலும் மக்களவைக்கும் கூடவிரைவில் இடைத் தேர்தல் வரலாம் என அவர் கூறினார்.

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவின் பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் இன்று காலை கூடின.

வட பழனி விஜயசேஷ மகாலில் அவைத் தலைவர் பொன்னையன் தலைமையில் இக் கூட்டங்கள் நடந்தன. இதில் தமிழகம் முழுவதும்இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

தீர்மானங்கள்:

கூட்டம் தொடங்கியதும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:

1. சுனாமி நிவாரணத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காகவும், வீரப்பன் கதையை முடித்ததற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவை இந்தபொதுக் குழு பாராட்டுகிறது.

மின்னணு இயந்திரம் வேண்டாம்:

மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் தேர்தல்கள் திருப்திகரமாக இல்லை. அவற்றின் நம்பகத்தன்மை மீது சந்தேகம்உள்ளதால் இனி வரும் தேர்தல்களில் ஓட்டுசீட்டு முறையே பின்பற்ற வேண்டும். மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டிய கடமைதேர்தல் கமிஷனுக்கு உண்டு.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பெரும் முறைகேடு நடந்தது. மேலும் வாக்குச் சாவடிகளிலும்மோசடி (அதிகாரிகளால்) நடந்தது. இதனால் தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. முறைகேடுகள் இல்லாமல் முறையாகதேர்தல் நடந்திருந்தால் அதில் அதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கும்.

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு மோசடியும் முறைகேடுகளும் தான் காரணம்.

தேர்தல் கமிஷன் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். பட்டியல் தயாரிப்பில் மோசடி செய்தவர்கள் (அரசுஊழியர்கள்) மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் அட்டைப் பூச்சிகள்:

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள 12 தமிழக அமைச்சர்களால் எந்தப் பயனும் இல்லை. அரசியல் அட்டைகள்மாதிரி ஆட்சியில் இருந்து கொண்டு அதிகாரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்காக இவர்கள் குரல் கொடுக்கத்தவறிவிட்டனர்.

பெட்ரோல் விலை:

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. ஒரே மாதத்தில் 3 முறை விலையை உயர்த்தினார்கள். சுதந்திரஇந்தியாவில் இப்படி ஒரு விலையேற்றம் நடந்ததே இல்லை. இது கடும் கண்டனக்குரியது.

தமிழகத்துக்கு போதிய மண்ணெண்ணெய் வழங்காமல் தமிழ்நாட்டை இரண்டாம் தர மாநிலமாக மத்திய அரசு நடத்துகிறது.

நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் வெளியிடச் செய்யவேண்டும்.

இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெயலலிதா பேச்சு:

இதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஜெயலலிதா பேசினார். அப்போது நிருபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களவைக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும் என ஜெயலலிதா கூறினார். அந்தத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும்தயாராகும்படி எங்களுக்கு உத்தரவிட்டார். இரு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.

மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அதிமுகவினர் அதிக அளவில் பாடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என்றார்.

புகார் வாசித்த கட்சியினர்:

முன்னதாக பொதுக் குழுவில் பேசிய பலரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது புகார்களை அடுக்கியதாகத் தெரிகிறது.

காண்ட்ராக்ட், டெண்டர் போனற பணிகளை கட்சியினருக்குத் தருவதில்லை, எங்களை அமைச்சர்கள் மதிப்ப்பதில்லை, பணத்தையேமுக்கியமான நினைக்கின்றனர், எந்த சிபாரிசையும் ஏற்பதில்லை, சொந்த ஊரிலேயே அதிகாரிகள் கூட சொல்வதைக் கேட்பதில்லைஎன்றனர்.

அமைச்சர்கள் மீதும் மாவட்டச் செயலாளர்கள் மீதும் கூறப்பட்ட புகார்களை முதல்வர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

விரைவில் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கட்சியிலும் அமைச்சரவையிலும் சில அதிரடி மாற்றங்களை ஜெயலலிதா செய்வார் என்றுதெரிகிறது.

அதிமுகவின் பொதுக் குழுவையொட்டி சென்னையின் முக்கிய சாலைகள் முழுவதும் அதிமுக கொடிகள், தோரணங்கள் படபடக்கின்றன.நகரெங்கும் போஸ்டர் மயமாக உள்ளது. கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு வெளியிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடியிருந்தனர்.

இதனால் விஜயசேஷ மகால் பகுதியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கஅழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X