For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி பஸ் எரிப்பு: காணாமல் போன ஆவணம் கண்டுபிடிப்பு!!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தர்மபுரியில் பஸ்ஸோடு மாணவிகள் அதிமுகவினரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான முக்கியஆவணம், உயர் நீதிமன்ற ஆவணக் காப்பகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொடைக்கானலில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட முறைகேடாக அனுமதி தந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் 1வருடம் சிறை தண்டனை விதித்து. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய அதிமுகவினர் தர்மபுரியில் கோவை வேளாண்கல்லூரியின் பேருந்துக்கு தீ வைத்தனர்.

இதில் பஸ்சில் இருந்த 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர். இந்த வழக்கு போலீசாரின் அலட்சியத்தால் தூங்கி வழிந்துகொண்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை கூட இன்னும் தொடங்கவில்லை. அதிமுகவினரை காப்பாற்றும் நோக்கத்தில் வழக்குமுடக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு விசாரணையை அரசுத் தரப்பு ஏன் இவ்வளவு தாமதப்படுத்தி வருகிறது என்று காரணம் கேட்டது சென்னைஉயர்நீதிமன்றம். அப்போது வழக்கு தொடர்பான முக்கிய ஆவணம் காணாமல் போய் விட்டதாக அரசுத் தரப்பில் குண்டுபோடப்பட்டது.

அரசுத் தரப்பின் இந்த அலட்சியமான பதிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

3 நாட்களுக்குள் ஆவணத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பேன், இந்த வழக்கில் இதுவரைஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை, அந்தந்த காலகட்டத்தில் உள்துறைச் செயலாளர்களாக இருந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

இந் நிலையில் காணாமல் போய் விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்ட ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற ஆவணக் காப்பகத்தில்தான் இந்த ஆவணம் இருந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கப் போகும் இந்த வழக்கு விசாரணையில், அரசுவழக்கறிஞராக ஆர்.சீனிவாசன் ஆஜராவார் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை தர்மபுரி நீதிமன்றத்தில் கேலிக் கூத்தான வகையில் அரசு நடத்தியதால், இதை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றியஉயர் நீதிமன்றம், அரசு வழக்கறிஞராக ஆஜராக ஆர்.சீனிவாசனை நியமித்தது.

நீதிபதி கனகராஜ்தான் கடந்த 2003ம் ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆனால் சீனிவாசனுக்கு நியமன உத்தரவே தராமல்அரசுத் தரப்பு காலதாமதம் செய்து வந்தது. இதற்கான காரணத்தையும் இப்போது நீதிபதி கேட்டுள்ளார்.

ஆண்டுக்கணக்கில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணம், உயர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையடுத்து, சில மணிநேரங்களிலேயே தமிழக அரசால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X