• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தமிழை இழந்து கொண்டிருக்கிறோம்: ராமதாஸ்

By Staff
|

சென்னை:

தமிழ் மொழியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தமிழர்கள் மத்தியில் வலுத்துக் கொண்டுள்ளது என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ் எழுதிய பண்பாட்டுச் சீரழிவுகள், தத்தளிக்கும் கல்வி, தமிழகம் எங்கே போகிறது?, சமூகம் - சில பதிவுகள், தமிழகத்தின் உயிர்நாடி ஆகிய ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். முன்னாள் சபாநாயகர் ராசாராம் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், தமிழ் மொழியை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே வலுப்பட்டுவருகிறது. தமிழ் மொழி நமது உயிர் நாடி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தமிழையும் இழந்து வருகிறோம்,காவியையும் இழந்து வருகிறோம்.

பிற மாநிலங்களில் உள்ள மொழிப் பற்றில் 1 பகுதி கூட தமிழர்கள் மத்தியில் இலலை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.இந்த வருத்தமான நிலை மாற வேண்டும்.

சினிமா மூலம் தமிழ் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழ் வளரக் கூடாது, தமிழ் அழிக்கப்பட வேண்டும் என்றுநினைப்பவர்கள்தான் எங்களது நோக்கத்தை தவறாக சித்தரித்து திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

சினிமா என்பது சிறந்த ஊடகம். ஆனால் அதை வைத்துக் கொண்டு மொழியைக் கொலை செய்வதை, பண்பாட்டைச் சீரழிப்பதை நாங்கள்அனுமதிக்க முடியாது. அதனால்தான் தமிழ் கலாச்சாரத்திற்கு முரண்பாடான காட்சிகள் தமிழ்ப்படங்களில் இடம் பெறக் கூடாது, தமிழ்ப்படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

சினிமாக்களில் தமிழ் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இதை சில சினிமாக்காரர்கள் மறுக்கலாம்.அவர்களோடு விவாதம் நடத்த நாங்கள் தயார், அவர்கள் தயாரா?

ஆங்கிலத்திற்கு நாங்கள் எதிரிகள் இல்லை. அதை ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர வாழ்க்கை மொழியாகஎடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மாணவர் விரும்பினால் எந்த மொழியையும் தனது விருப்ப மொழியாக எடுத்துக் கொண்டு படிக்கலாம்.ஆனால் தமிழே படிக்காமல் உயர் கல்விக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

தமிழர்களிடையே மங்கி வரும் தமிழ் உணர்வை மீட்கவே தமிழ் பாதுகாப்பு இயக்கம். இதேபோல மறைந்து வரும் தமிழ்ப் பண்ணிசையைவளர்க்கவும் அறிஞர் குழு ஒன்றை அமைக்கவுள்ளோம். அதில் குறைந்தபட்சம் 10 தமிறிஞர்கள் இடம்பெறுவர்.

இந்தக் குழுவிடம் தமிழ் பண்ணிசையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 1 மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறுகேட்டுக் கொள்ளப்படும். அதன் பரிந்துரைகளை திமுக தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கவுள்ளோம்.

அவர்தான் அடுத்த முதல்வராக வரப் போகிறார். எனவே அவரிடம்தான் இதை தெரிவிக்க வேண்டும். மேலும், சட்டசபைத்தேர்தலின்போது தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களின்போது பண்ணிசை வளர்ச்சிக்கான பரிந்துரைகளைத்தான் நாங்கள்நிபந்தனைகளாக வைக்கப் போகிறோம்.

தமிழுக்கு சேவை செய்பவர் கருணாநிதி. எனவே அவரிடம் இந்த நிபந்தனைகளை கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.

நிபுணர் குழு பரிந்துரைகள் தவிர, பள்ளி கல்லூரிகளில் தமிழ் இசையை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அதற்கு 100 மதிப்பெண்நிர்ணயிக்க வேண்டும். இசையறிஞர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதையும் கோரிக்கைகளாக வைக்கவுள்ளோம்.

இவைதான் எங்களது நிபந்தனைகள். இவற்றை எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதியைக் கேட்டுக்கொள்ளப் போகிறோம் என்றார் ராமதாஸ்.

ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், ராமதாஸ் பெரியார் போல. கோபம் வந்து விட்டால் சில காரியங்களை அவரது பாணியில் செய்வார்.சினிமா மீது அவருக்குக் கோபம் கிடையாது. அங்கு தமிழ் அழிக்கப்படுவதால்தான் எதிர்க்கிறார்.

இப்போது அரசியலில் சரியான வழிகாட்டியாக ராமதாஸ் விளங்குகிறார். நீங்கள் என்ன செய்தாலும் அது தமிழகத்தின் தலைவிதியைநிர்ணயிப்பதாக அமையும் என்றார் வீரப்பன்.

நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X