For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலிலேயே வாழ்ந்து மறைந்த ஜெமினி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Gemini Ganesanகாதல் என்றால் உடனே நினைவுக்கு வரும் அளவுக்கு, நடிப்போடு காதலிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் ஜெமினி கணேசன்.

1920ல் புதுக்கோட்டையில் மிக ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த ஜெமினி நன்றாக படித்தவர். சென்னை தாம்பரம்கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இவரை ஜெமினி ஸ்டுடியோவின்கேமராமேன் ராம்நாத் சந்தித்த பின்னர் வாழ்க்கையே மாறியது.

1947ல் கல்லூரி வேலையை விட்டுவிட்டு சினிமா ஆசையில் ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக சேர்ந்தார் கணேசன்.அதுமுதல் ஜெமினி கணேசன் ஆனார்.

3 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்த ஜெமினி, மிஸ் மாலினி படத்தின் மூலம் நடிப்புக்கு வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாகஓடவில்லை. ஆனாலும் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.

மனைவி பாப்ஜியுடன் ஜெமினி கணேசன்நிதி

இதையடுத்து அவர் நடித்த சக்கரதாரி, மூன்று பிள்ளைகள், நவஜீவனம், அவ்வையார் ஆகிய படங்களும் ஜெமினிக்குகைகொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த அவர் ஜெமினி ஸ்டூடியோ வேலையை உதறினார்.

இதன் பிறகு நாராயணன் அன்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அங்கிருந்து தாய் உள்ளம் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படமும் சரியாக ஓடவில்லை.

இந்த சமயத்தில் தான் அவரது 30வது வயதில்தான் ஏவிஎம் நிறுவனம் தனது பெண் படத்தில் ஜெமினியை ஹீரோவாகஅறிமுகப்படுத்தியது. அதன் பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் படத்தின் மூலம் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார் ஜெமினி.

பார்த்திபன் கனவு, வஞ்சிக்கோட்டை வாலிபன், மிஸ்ஸியம்மா, பாசமலர், பணமா பாசமா, கொஞ்சும் சலங்கை, தேன் நிலவு,கற்பகம், இருகோடுகள், புன்னகை, நான் அவனில்லை ஆகிய படங்கள் மூலம் உச்சத்தை எட்டினார்.

84 வயதான ஜெமினி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மத்தியில் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு வெற்றி நடைபோட்டவர் ஜெமினி. 1950 முதல் 1970 வரை முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோயின்களுடனும்நடித்தவர்.

காதல் மன்னன் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். இயக்குனர் பாலச்சந்தரின் படங்களில் தொடர்ந்து நடித்த ஒரே நடிகராகவும்ஜெமினி விளங்கினார். நான் அவன் இல்லை என்ற படத்தில் இவர் 9 வேடங்களில் நடித்தார்.

கல்யாணப் பரிசு படம் அவருக்கு பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திப்படங்களிலும் ஜெமினி நடித்துள்ளார்.

ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி (அலமேலு) என்ற மனைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார். பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார்.

பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி. தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத்திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்கள் அவருடன் தனிக் குடித்தனம் நடத்திவிட்டு மீண்டும்பாப்ஜியிடமே திரும்பி வந்தார்.

பாப்ஜி மூலம் ஜெமினிக்கு 4 மகள்கள் பிறந்தனர். மூத்த மகள் டாக்டர் ரேவதி அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகள்டாக்டர் கமலா செல்வராஜ் சென்னையில் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சோதனைக் குழாய் குழந்தைகள்ஆய்வில் உலகப் புகழ் பெற்றவர்.

ஜெமினி கணேசனின் மகள்கள் டாக்டர் ரேவதி, நாராயணி, டாக்டர் கமலா, நடிகை ரேகா, விஜய சாமூண்டீஸ்வவரி, டாக்டர் ஜெயா

இவரது உதவியுடன் தமிழ்நாட்டில் ஏராளமானோர் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். 3வது மகள் நாராயணிடெல்லியில் ஒரு ஆங்கில நாளிதழில் பணியாற்றி வருகிறார். இவர் ஜெமினி கணேசனின் வாழ்கையை ஆங்கிலத்தில்எழுதியுள்ளார்.

நான்காவது மகளான ஜெயா, ஜிஜி என்ற பெயரில் நினைவெல்லாம் நித்யா படத்தில் அறிமுகமானார்.இதன் பிறகு சில படங்களில்நடித்த பிறகு சினிமா உலகை விட்டு ஒதுங்கி விட்டார்.

இரண்டாவது மனைவியான புஷ்பவள்ளி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர்.இவரை ஜெமினி காதலித்து திருமணம்செய்து கொண்டார். இவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் தான் இந்தித் திரையுலகில் தற்போதும் பரபரப்பாகஇருக்கும் ரேகா.

ஜெமினியின் 3வது மனைவியான நடிகை சாவித்ரி மூலம் விஜய சாமுண்டீஸ்வரி எனற மகளும், விஜய சதீஷ் என்ற மகனும்உள்ளனர். சாவித்ரி மறைவுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று குடியேறி விட்டனர்.

ஜெமினி கணேசன் இறந்த செய்தி இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது 7 மகள்கள் மீதும் ஜெமினி கணேசன் மிகுந்த பாசம்வைத்திருந்தார்.

தன்னுடன் நடித்த பல நடிகைகளுடனும் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டவர்.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலின் உன்னால் முடியும் தம்பி, பின்னர் அவ்வை சண்முகி ஆகிய படங்களில் ஜெமினியின்வேடமும், நடிப்பும் பேசப்பட்டன. இதன் பிறகு கார்த்திக்குடன் மேட்டுக்குடி மற்றும் பிரபு தேவா, அஜித் உட்பட இன்றைய இளம்ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.

பொதுவாக ஜெமினி கணேசன் ஆக்ஷன் படங்களில் அவ்வளவாக நடித்ததில்லை. மிகவும் மென்மையான கதாபாத்திரங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார். படங்களில் வசனம் பேசும்போது கூட இவர் அதிரடியாக பேசுவது கிடையாது.

இதனால் அவரை ரசிகர்கள் செல்லமாக "சாம்பார் என்ற பட்டப்பெயருடன் அழைத்தனர். இதற்காக ஜெமினி யாருடனும்கோபப்பட்டதில்லை.

மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்ற ஜெமினிக்கு, இந்தி நடிகை ரேகா, பிரபலடாக்டர் கமலா செல்வராஜ் உள்ளிட்ட 7 மகள்களும்,1 மகனும் உள்ளனர்.

இயல்பான நடிப்பாலும், தனது காதல் சேஷ்டைகளாலும் பிரபலமான ஜெமினி நடிக்க வருவதற்கு முன் சென்னை தாம்பரம்கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பேராசியராக பணியாற்றியவர்.

சினிமாவில் நடித்த பணத்தால் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பல இடங்களில்எஸ்டேட் மற்றும் நிலங்களை வளைத்துப் போட்டார்.

தன் சக நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர் போன்றவர்கள் அரசியல் பக்கம் எட்டிப் பார்த்தபோதும் ஜெமினிக்கு அந்தஆசை மட்டும் வந்ததே இல்லை. அரசியலை விட்டு தூர ஒதுங்கியே இருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ஜெமினி கணேசனுக்கு மேல்சபை எம்.பி. பதவி தேடி வந்தது. பல மூத்த அரசியல்தலைவர்கள் எம்.பி. பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தினார்கள். ஆனால் அரசியல் வாடையே பிடிக்காதஜெமினி, தனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனால் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றார். வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்ந்தவர் ஜெமினி.அவரது மறைவு, தமிழ் திரையுலகுக்கு பேரிழப்புதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X