முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முஸ்லீம்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ராமதாஸ் பேசுகையில், முஸ்லீம் சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடுஅளிப்பதற்கு வசதியாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், அரசு வேலையில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது.
கேரளா, கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. அதேபோல தமிழகத்திலும் இட ஒதுக்கீடுவழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications