ஏர் இந்தியா பொறியாளர்கள் திடீர் ஸ்டிரைக்: அமெரிக்க விமானங்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பொறியாளர்களும் தொழில்நுட்ப ஊழியர்களும் திடீரென வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்கா செல்ல இருந்த 3 விமானங்கள் உள்பட நான்கு ஏர் இந்தியா விமானங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களின் தொழிற்சங்கத்துக்கு இன்று தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அது ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

இதைக் கண்டித்து இன்று காலை 5 மணி முதல் இந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் இன்று காலை மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் இருந்து கிளம்பவிருந்த 4 ஏர் இந்தியா விமானங்களும் ரத்தாயின.இதில் 3 விமானங்கள் அமெரிக்கா செல்ல இருந்தன.

பிற விமான நிலையங்களில் இருந்து ஊழியர்களைக் கொண்டு வந்து இந்த விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+