For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரவியை கொல்ல சதி: அய்யர், ரகு மீதான கஞ்சா கேஸ் முழு விவரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Raghuசங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்தைக் கொலை செய்ய சதி செய்ததாக சங்கர மடத்தின் முன்னாள்மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சுந்தரேச அய்யர்மற்றும் ரகு ஆகியோர் மீது புதிதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 22.4.1005 அன்று கிடைத்த தகவலின்படி, செங்கை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 28 வயது வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் அகிலன்என்றும், சொந்த ஊர் சென்னகுப்பம் மாத்தூர் காமராஜர் தெரு என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து கஞ்சா பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அகிலன் கொடுத்தவாக்குமூலம்:

எனது பெயர் அகிலன். சேட்டு என்றும் என்னை அழைப்பார்கள். திருமணமாகி விட்டது. வீரராகவன் என்பவரைக் கொன்றவழக்கில் என் மீது கூடுவாஞ்சேரி போலீஸில் புகார் உள்ளது. கள்ளச்சாராயம் கடத்துவேன், பாப்பாச்சேரி பிரபா, மாந்தோப்புகுண்டுராஜ் ஆகியோரிடம் அடியாளாகவும் இருக்கிறேன்.

ஒரு வழக்கு தொடர்பான வாரண்ட்டுக்காக சிறைக்கு சென்று விட்டு 18.4.2005 அன்று ஜாமீனில் வெளியே வந்தேன். ஒருமாதத்திற்கு முன்பு நான் சிறையில் இருந்தபோது காஞ்சிபுரம் கோர்ட்டுக்குப் போய் விட்டு வந்த ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன்ஆகிய 3 பேரும் என்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி சுந்தரத்திடம் பேசினர்.

அப்போது, ரவி சுப்பிரமணியம் அப்ரூவரமாக மாறி சாட்சி சொல்லப் போகிறான். அவனை உயிரோடு விட்டு வைத்தால்சங்கரராமன் வழக்கில் அனைவருக்கும் தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும் என்று கூறினர். மேலும் எப்படியாவது ரவிசுப்பிரமணியத்தை தீர்த்துக் கட்டி விட வேண்டும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மீனாட்சி சுந்தரத்திடம்அவர்கள் கூறினர்.

பின்னர் இதுகுறித்து என்னிடம் மீனாட்சி சுந்தரம் பேசினார். என்னை ஜாமீனில் வெளியே எடுக்க உதவினார். நான் வெளியே வந்தபிறகு கதிரவனின் அண்ணன் அலங்கார் என்பவரை சந்தித்துப் பேசினால் அவர் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பார்என்றும் மீனாட்சி சுந்தரம் என்னிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு கோர்ட்டுக்குக் கொண்டு வரும்போது கொல்ல வேண்டும் அல்லது காஞ்சிபுரம் கிளைச்சிறைக்கு உள்ளே சென்று ரவி சுப்பிரமணியத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்றும் என்னிடம் மீனாட்சி சுந்தரம் கூறினார்.

Sundaresa Iyerபின்னர் நான் ஜாமீனில் வந்த பிறகு இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார் என்னை சந்தித்தார். ஏப்ரல் 27ம் தேதிஅனைவரும் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வருவோம். ரவி சுப்பிரமணியமும் வருவான். நமது கோஷ்டியைச் சேர்ந்த அத்தனைஆட்களையும், ஆயுதங்களுடன் கூட்டி வர வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

என்ன ஆனாலும் எப்படியாவது ரவியை தீர்த்துக் கட்டி விட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து நான் அலங்காரைப்பார்த்தேன். அவர் எனக்கு 20,000 ரூபாய் பணம் கொடுத்தார். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு நான் திரும்பினேன்.

ஆனால் எனது சொந்த செலவுக்காக பணம் தேவைப்பட்டதால், 20ம் தேதி திருப்பதி சென்று, அங்கு ரூ. 10,000 கொடுத்து 3 கிலோகஞ்சா வாங்கினேன். செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா லாட்ஜில் தங்கிய பின்னர் இரவில் சென்னை கிளம்பலாம் என்று முடிவுசெய்து பஸ் நிலையம் வந்தேன். அப்போதுதான் போலீஸாரிடம் பிடிபட்டேன் என்று அகிலன் கூறியுள்ளார்.

அகிலனிடமிருந்து 3 கிலோ கஞ்சா, 9,540 பணம், சிறிய கத்தி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகிலன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் குற்றவாளியாக அகிலன் சேர்க்கப்பட்டு, மீனாட்சி சுந்தரம், ரகு,சுந்தரேச அய்யர், கதிரவன், குமார், அலங்கார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம் (கஞ்சா வழக்கு), சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அகிலன், மீனாட்சி சுந்தரம், ரகு, கதிரவன் ஆகியோரை இந்த வழக்கிலும் போலீஸார்கைது செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X