பண்ணையார் எண்கெளன்டர்: ராமன் கமிஷனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சென்னை:
வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ராமன் கமிஷன் தனது விசாரணையைதொடங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் பண்ணையாரும், அவரது நண்பர் பெப்சி முரளி என்பவரும், நிதி நிறுவன அதிபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சிசெய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பண்ணையாரைப் பிடிக்க சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு போலீஸார் சென்றபோது,வெங்கடேச பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த எண்கெளன்டர் சாவு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமனை உறுப்பினராக கொண்ட விசாரணைக் கமிஷனை தமிழக அரசுஅமைத்தது. கமிஷன் அமைக்கப்பட்ட சில வாரங்களில் நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரதுவீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச் சூழ்நிலையில், பண்ணையாரின் நண்பரான பெப்சி முரளி என்பவர், ராமன் கமிஷனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், ராமன் கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டார்.
இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகண்ணதாசன், ராமன் கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
மேலும், ராமன் கமிஷன் தனது விசாரணையை தொடங்கி அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யலாம், ஆனால்அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications