கும்மிடிப்பூண்டி: கோஷ்டிப் பூசலில் திமுக

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் அமைச்சர்கள் உதவியோடு பணத்தால் அதிமுக கும்மியடித்துக் கொண்டிருக்க, பெரும் கோஷ்டிப் பூசலில்தடுமாறிக் கொண்டிருக்கிறது திமுக.

இத் தொகுதியில் ஸ்டாலின் சாய்ஸான வழக்கறிஞர் பி.வெங்கடாச்சலபதி போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கு சீட்கிடைக்கவில்லை. இதனால், வெத்தலை போட்டுவிட்டு பல் குச்சி எடுத்து குத்தியவாரே ஜாலியாக சுற்றி வந்தார் வேணு. தேர்தல்வேலையில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

இங்கு தேர்தல் பணிகளை கவனித்துக் கொள்ள ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி உள்ளிட்ட 11 பேர்கொண்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.இவர்களுக்கு உதவ மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீராசாமியும், வீரபாண்டியும் வேணுவை வீட்டுக்கே போய் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியதையடுத்தே, தேர்தல்வேலைகளில் குதித்தார் வேணு.

வேணுவை சமாதானப்படுத்தினாலும் இப்போதையே திமுக மாவட்டச் செயலாளரான சிவாஜியை கட்சித் தலைமையால்சாமாதானப்படுத்த முடியவில்லை. இந்தத் தொகுதியில் போட்டியிட பரிமளம் என்பவரை சிபாரிசு செய்தார் சிவாஜி. அதை கட்சித்தலைமை நிராகரித்துவிட்டது.

இதனால் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றி வரும் சிவாஜி பிரச்சாரத்தில் தீவிரமாக இல்லை. மாவட்டச் செயலாளரேகவலையில்லாமல் இருப்பதால் அவரது ஆதரவு நிர்வாகிகளும் பேருக்கு தொகுதிக்குள் ரவுண்டு அடித்து வருகின்றனர்.

ஆனால், நிர்வாகிகள் எப்படி நடந்து கொண்டாலும் கட்சியின் தொண்டர்கள் தொகுதியில் வழக்கம்போல் கை காசை போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். பழைய ஸ்டைலான திண்ணைப் பிரச்சாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதிமுகவினர் மாலையில் வீடுகளின முன் அமர்ந்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+