கும்மிடிப்பூண்டி: தொகுதி ரவுண்ட் அப்
கும்மிடிப்பூண்டி:
இத்தொகுதியை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வென்று வருகின்றன.
1967 முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக 5 முறையும் (1977, 1980, 1984, 1991, 2001), திமுக4 முறையும் (1967, 1971, 1989, 1996) இத் தொகுதியில் வென்றுள்ளன.
இத்தொகுதியில், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன. அதிக அளவில் கிராமங்களைக் கொண்டஇத்தொகுதியில் மொத்தம் 166 கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வன்னியர்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையினராக உள்ளனர். மொத்தம் 40 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அடுத்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் 30 சதவீதம் பேர் உள்ளனர்.
இவர்களைத் தவிர முதலியார்கள் 12 சதவீதம் பேரும், நாயுடு, ரெட்டியார் மொத்தமாக 8 சதவீதம் பேரும் உள்ளனர். மீனவர்களும்3 சதவீதம் பேர் உள்ளனர்.
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படுமா?












Click it and Unblock the Notifications