காஞ்சி: ஸ்டாலினுக்கு விஷப் பரீட்ச்சை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அதிமுகவின் பண பலமும், போலீஸ் துணையும், அமைச்சர் பட்டாளத்தின் நேரடி களப் பணியும் திமுகவை பெரும்அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதை நேரடியாகவே உணர முடிகிறது.
இந்தத் தொகுதியில் அதிமுகவின் அரசு இயந்திர, கரன்சி பலத்தை முறியடித்து திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியபொறுப்பை ஸ்டாலினிடம் தந்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
வழக்கமாக திறந்த ஜீப்பில் ரவுண்ட் அடித்து, நோகாமல் ஓட்டு கேட்டுவிட்டு, ஊருக்குப் போய்விடும் ஸ்டாலினுக்கு இது அக்னிபரிட்ச்சை. கட்சி தனக்குக் கொடுத்துள்ள பணியை சவாலாக எடுத்துக் கொண்டு தொகுதியில் தீவிரமாய் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
அவரது வலது கரமான காஞ்சிபுரம் ஒன்றியச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மகனுமான பி.எம்.குமார் தான்வேட்பாளர். அடிதடியை சமாளிக்கும் படை பலமும் கொண்டவர்.
அதிமுக அமைச்சர்களை சமாளிக்க ஸ்டாலினுக்குத் துணையாக முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு உள்ளிட்ட 11 பேரை களமிறக்கியிருக்கிறது திமுக. இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராஜாஆகியோரும் அடக்கம்.
இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார், வன்னியர் ஆகிய சமூகத்தினரின் ஓட்டுக்களே வெற்றி தோல்வியைநிர்ணயிக்கும் என்பதால், பாமகவின் பலத்தை பெருமளவில் நம்பியுள்ளது திமுக.
தொகுதியில் எங்கு நோக்கினும் அதிமுக வேட்பாளரின் பெயர் தான் சுவர்களை ஆக்கிரமித்துள்ளது. சுவர் கிடைக்காமல்போனதால் தட்டி, பேனர்களை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர் திமுகவினர்.
ஸ்டாலினே நேரடியாகக் களத்திற்கு வந்தாலும் கூட திமுக தரப்பில் இருந்து இன்னும் பெட்டியைத் திறக்கவில்லை. இதனால்தொண்டர்களிடம் உற்சாகம் மிஸ்ஸிங்.
இந் நிலையில் வரும் 10ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றும் பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது.
வாக்குப் பதிவு நடக்கும் பூத்களில் அதிமுகவினரை சமாளிக்கும் வகையில் 11 சுயேச்சைகளை களமிறக்கியிருக்கிறது திமுக.திமுகவினரான இந்த சுயேச்சைகளின் சார்பில் பூத் ஏஜெண்டுகளாக திமுகவினர் நுழைவார்கள்.
அதிமுக 4 சுயேச்சைகளை இறக்கிவிட்டுள்ள நிலையில், திமுக 11 சுயேச்சைகளை நிறுத்தியுள்ளது. இதனால் பூத்களில் பரபரப்புக்குபஞ்சமே இருக்காது.












Click it and Unblock the Notifications