For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு: லை டிடெக்டர் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

Teacher Meenakshi with her Husband and Daughterகுளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரிடமும் உண்மை அறியும்கருவியைக் கொண்டு விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை ஆசியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் ஒரு துப்பும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீஸார்திணறி வருகின்றனர். இதுவரை பல கட்டமாக விசாரணை நடத்தப்பட்ட போதிலும், மீனாட்சி என்ன ஆனார் என்பதுதெரியவில்லை.

இந்த வழக்கில் இறுதிக் கட்டமாக ஒரு வாய்ப்பை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கொடுத்துள்ளது. இந்த விசாரணையிலும் முடிவுதெரியாவிட்டால் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

இந் நிலையில், மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், அவரது சகோதரர் பசுபதி, எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தின் உறவினர்ரங்கராஜன், மீனாட்சியுடன் பணியாற்றி வரும் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் உண்மை அறியும் கருவியைக் கொண்டுவிசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நான்கு பேரின் உடல் நிலையையும் பரிசோதனை செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர்களைபோலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதன் பின்னர் நான்கு பேரும் சென்னைக்குக் கொண்டு செல்லப்படுவர். அங்குள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் உண்மைஅறியும் கருவியைக் கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X