For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டமன்றத் தேர்தலிலும் வெல்வோம்: ஜெ. சூளுரை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

2006ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் வெற்றிமுன்னோட்டமாக அமைந்துள்ளது. மக்கள் என் பக்கம் உள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபை இடைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது போயஸ் கார்டன்இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா. வழக்கமாக இங்கு செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்துவதில்லை.

ஆனால், இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் போயஸ் கார்டனின் அமைச்சர்கள் புடைசூழ நிருபர்களிடம் ஜெயலலிதா பேசினார். அவர்கூறுகையில்,

மக்கள் எப்போதும் எங்கள் பக்கம்தான் என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. அது உண்மை தான் என்பதை இப்போதுகாஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி மக்கள் மீண்டும் நிரூபித்து விட்டார்கள்.

எதிரணியினர், ஏழு கட்சிக் கூட்டணி என்று தம்பட்டம் அடித்தார்கள், மார் தட்டினார்கள். அதிமுக ஒரு பக்கம், எதிரணியினர், ஏழுகட்சி கூட்டணி. ஆனால் அதிமுக தனித்து நிற்கிறது என்று ஒரு கணம் கூட நான் எண்ணியதேயில்லை, கலங்கியதும் இல்லை.

மக்கள்தான் எங்கள் கூட்டணி என்று நம்பினேன். மக்களை நம்பித்தான் தேர்தல் களத்தில் தனியாக இறங்கினேன்.

மக்கள் எங்களுடன் கூட்டணி அமைத்தார்கள். வெற்றியைத் தேடித் தந்தார்கள். ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகளில் அதிமுகவுக்கு இத்தனை வாக்குகள் என்று செய்தி வெளியிடுகிறார்கள். மறுபக்கம்திமுகவுக்கு இத்தனை வாக்குகள் என்று செய்தி வெளியிடுகிறார்கள். வாக்கு வித்தியாசம் இத்தனை என்றும் செய்திவெளியிடுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால் அதிமுக தனியாக இத்தனை வாக்குகள் பெற்றிருப்பதுதான் உண்மை.மறுபக்கம், எதிரணியிலே, திமுக என்று பெயர் போடுகிறார்களே தவிர அது திமுக தனியாக பெற்ற வாக்குகள் அல்ல. திமுகஉள்ளிட்ட 7 கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்தான் அவை.

இன்னொன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கும்மிடிப்பூண்டியிலே அதிமுக ஒரு புறம், எதிரணியிலே 7 கட்சி கூட்டணி.அங்கே வெற்றி பெற்றிருக்கிறோம்.

காஞ்சிபுரத்திலே அதிமுக ஒருபுறம், எதிரணியிலே 7 கட்சி கூட்டணி அல்ல, 8 கட்சி கூட்டணி. அந்த 8வது கூட்டணிக் கட்சி யார்(சங்கராச்சாரியார்) என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை, உங்களுக்கே தெரியும் அது யார் என்று.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இது மக்களுடைய வெற்றி, மக்கள் குரலே, மகேசன் குரல் என்றுஎப்போதுமே நான் நிம்புகிறேன். 7 கட்சி கூட்டணி என்ற இறுமாப்பில், அகந்தையில், மமமதையில், ஒன்றாக இருக்கிறோம்,எங்களை யார் வீழ்த்த முடியும், எங்களை என்ன செய்ய முடியும்ம் என்ற அகங்காரத்தில் மக்களையே மறந்து விட்டார்கள்.

தாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும்செயல்படலாம் என்று எண்ணி நடந்தார்கள். ஆனால் எங்களைப் பொருத்தவரை, அதிமுகவைப் பொருத்தவரை மக்கள்தான்இறுதி எஜமானர்கள் என்பதை மறந்தது கிடையாது.

நான் இருப்பதும், அதிமுக இருப்பதும், இந்த அரசு இருப்பதும் மக்களுக்காகத்தான், மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அந்தமக்களுக்கு சேவை செய்யத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நான் செயல்பட்டு வருகிறேன்.

அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் நான் திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகிறேன். 4 ஆண்டுகளில் மக்களின்வாழ்க்கை மேம்பாடு அடைய எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். அதற்கு மக்கள் தங்களதுவரவேற்பை தெரிவித்து ஆதரவைக் கொடுத்துள்ளார்கள்.

மகத்தான வெற்றியை இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அளித்த மக்களுக்கு எனது இதயம் கனிந்த மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக உடன்பிறப்புகள் அனைவருக்கும், சகோதர சகோதரிகள்அனைவருக்கும் உள்ளப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2006ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இது நல்ல அறிகுறி, அச்சாரம், முன்னோட்டமாகும் என்றார்ஜெயலலிதா.

இந்த வெற்றியால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமா என நிருபர்கள் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்றுபதிலளித்தார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X