For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சன் டிவியின் டி.டி.எச் சேவைக்கு அனுமதி !

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி & சென்னை:

சன் டிவியின் சார்பில் டி.டி.எச் (கேபிள் இல்லாமல் வீடுகளுக்கு நேரடியான ஒளிபரப்பு) சேவையை நடத்த மத்திய அரசுஅனுமதித்துள்ளது. இதை எதிர்த்து அதிமுகவின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கேபிள் டிவி இணைப்பு இல்லாமல், சிறிய டிஷ் ஆண்டெனா மூலம் நேரடியாக பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகளைபார்க்கும் முறைதான் டி.டி.எச். இதற்கு செட்-டாப் பாக்ஸ்கள் எனப்படும் ரிசீவரை டிவியில் பொறுத்த வேண்டி இருக்கும். இந்தரிசீவர்களை தானே இறக்குமதி செய்து மிகக் குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்க சன் டிவி முடிவு செய்துள்ளது.

இந்த டிடிஎச் சேவையை இந்தியாவில் முதல் முறையாக ஜீ டிவி கடந்த 2003ம் ஆண்டு தொடங்கியது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்குச் சொந்தமான தூர்தர்ஷன் மூலம் தூர்தர்ஷன் டைரக்ட் என்ற பெயரில், டிடிஎச் சேவைதொடங்கப்பட்டது. இதன்மூலம் கேபிள் டிவிக்காரக்களின் மாத வாடகை, அட்வான்ஸ், வயர் செலவு ஆகியவற்றில் இருந்துநிரந்தரமாகத் தப்பிவிடலாம்.

இவர்களைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்திற்கும், இந்தியாவின்முன்னணி நிறுவனமான ஸ்டார் டிவிக்கும் டிடிஎச் சேவையைத் தொடங்க மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத துறைஅமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சன் டைரக்ட் என்ற பெயரில் சன் டிவி தனது டிடிஎச் சேவையை தொடங்கவுள்ளது.

அதேபோல டாடா நிறுவனத்துடன் இணைந்து ஸ்பேஸ் டிவி என்ற பெயரில் ஸ்டார் டிவி டிடிஎச் சேவையை வழங்கவுள்ளது.

ரூ. 1,600 கோடி முதலீட்டில் ஸ்பேஸ் டிவி டிடிஎச் சேவையை ஸ்டார்- டாடா நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.

எதிர்த்து அதிமுக வழக்கு:

இந் நிலையில் சன் டிவி நிறுவனத்திற்கு டிடிஎச் சேவையை நடத்த மத்திய அரசு அனுமதித்தை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில், அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.ஜி.நாராயணன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நாராயணன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ஏற்கனவே சன் டிவி நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் என்ற பெயரில்கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சன் டிவி நிறுவனத்திற்கு இந்த உரிமம் வழங்கப்பட்டால், மாநிலம்முழுவதும் ஒளிபரப்பை ஏகபோகமாக்கி வைத்துக் கொள்வார்கள்.

ஏற்கனவே சன் டிவி குடும்பத்தினர் தென் இந்தியாவிலேயே பல சேனல்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள்.இந்தத் தொழிலில் உள்ள சக போட்டியாளர்களைத் தடுக்கிறார்கள். ராஜ் டிவி, விஜய் டிவி செய்தி சேனல் எடுக்கப்பட்டு விட்டது.

எனவே நேரடி ஒளிபரப்பு உரிமையை சன் டைரக்ட் நேரடி ஒளிபரப்புதொலைக்காட்சிக்கு வழங்கக் கூடாது. விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் நாராயணன்.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் பிரபா, நாகப்பன் ஆகியோர், வருகிற 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஜெயா டிவியின் சார்பில் தனியாக ஒரு செய்திச் சேனலைத் தொடங்க முயற்சி நடப்பதும் அதை திமுக தடுத்து வருவதும்குறிப்பிடத்தக்கது. சசியின் அக்காள் மகன் தினகரனின் பெயரால் ஆரம்பிக்கப்பட இருந்த இந்த சேனலுக்கு, அவர் மீதானஅன்னிய செலாவணி மோசடியை சுட்டிக் காட்டி உள்துறை அமைச்சகம் (அத்வானி அமைச்சராக இருந்தபோது) அனுமதிமறுத்துவிட்டது.

அதிலிருந்தே பாஜக-அதிமுக இடையே உரசல் அதிகமானதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X