• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெல்லை செல்கிறார் ஜெயலலிதா

By Staff
|

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா ஜூன் மத்தியில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தமிழக அரசு ரூ. 75 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளது. இந்தநினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கவுள்ளார்.

இதற்காக ஜூன் மாதம் மத்தியில் அவர் திருநெல்வேலி செல்கிறார். அநேகமாக அவர் 17ம் தேதி திருநெல்வேலி செல்வார் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஜெயலலிதா தொடங்கி வைப்பார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நெல்லை செல்லவுள்ளார். இருப்பினும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணம்இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் நெல்லையில் நடந்து வருகின்றன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X