For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத் தேர்தல் முடிவு ஒரு எச்சரிக்கை: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கைஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்த திமுக மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. கருணாநிதிநிறைவுரையாற்றினார். கருணாநிதி பேசுகையில், மு.க.ஸ்டாலின் பேசுகையில், மாநாட்டுப் பந்தலில் சிறு தீவிபத்து ஏற்பட்டது.மின் கசிவு காரணமாக ஏற்பட்ட அந்த சிறு பொறியையடுத்து உஷாரடைந்த தொண்டர்கள், பந்தலின் மற்ற பகுதிகளுக்கும் தீபரவுவதற்குள் தடுத்து அணைத்து விட்டனர்.

இதே போலத்தான் சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளும். தேர்தல் முடிவுகள் நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. சிறு தீப்பொறிஉடனடியாக அணைத்தது போல, தேர்தல் முடிவுகளையும் நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக நினைத்து, அந்த முடிவுகள்பொதுத் தேர்தலிலும் பரவுவதற்குள், தடுத்து, வெற்றியை நம் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும். அதை செய்ய நாம்தவறினால் பாதிப்பு அதிகமாகி விடும். அந்த பாதிப்பு மக்களுக்கு என்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும்.

திமுகவுக்கு ஏற்றத் தாழ்வுகள் புதிதல்ல. எத்தனையோ இடர்பாடுகள், இடையூறுகள், தோல்விகளை சந்தித்து, அதிலிருந்து மீண்டுவிஸ்வரூபம் எடுத்துள்ளதை தொண்டர்கள் மறந்து விடக் கூடாது.

எந்த சிக்கல்கள் வந்தாலும, இடையூறுகள் வந்தாலும் ஜெயலலிதா தலைமையிலான ஆணவம் பிடித்த அரசு மீண்டும் ஆட்சிக்குவந்து விடக் கூடாது என்பதில் திமுகவும், தோழமைக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. வரும் பொதுத் தேர்தலிலும் இந்தஉறுதியான கூட்டணி தொடரும்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. மாநாட்டிற்கு நாங்கள் வருவோமா, கோர்ட்டில்நிறுத்தப்படுவோமா என்றெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்தன. எங்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில்படித்தோம்.

பெங்களூரில் 63 கோடி சொத்து சேர்த்த வழக்கு நடக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப்படாமல், என் மீதும், ஸ்டாலின்உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப் போட இந்த அரசு முயற்சிக்கிறது. கோர்ட்டுக்கு வழக்கு வந்தால் சட்டப்படி அதை சந்திப்போம்.

கடந்த ஆண்டில் திமுகவும், தோழமைக் கட்சிகளும் சேர்ந்து மக்கள் முன் வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஓரளவுநிறைவேற்றி விட்டது. அதில் ஒன்றுதான் தமிழ் செம்மொழி அறிவிப்பு. தமிழ் செம்மொழி பூரணத்துவம் அடைய வேண்டும் என்றுஇந்த மாநாட்டின் மூலம் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் இருந்து என்ன பயன் என்று கேட்டவர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். சேதுசமுத்திரத் திட்டம், செல் போன் கட்டணக் குறைப்பு ஆகியவற்றை அவர்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இதுமட்டுமா? தென்னிந்திய நகரங்களை இணைத்து புல்லட் ரயில் கொண்டு வர வேண்டும், வேலை வாய்ப்பு கல்வியில்சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், அதேபோல பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளோம்.

சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி ஜூன் 15ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தமுடிவு செய்துள்ளோம். அதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அதற்கும் பலன்கிடைக்காவிட்டால் தெடார்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X