For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணைக் கொடுமை: மருத்துவக் கல்லூரி டீன் மீது பெண் டாக்டர் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் கலாநிதி, அவரது மனைவிகெளசல்யா, கணவர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் அனு காயத்ரி மாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் அனு காயத்ரி தனது தந்தை டாக்டர் மகுடபதியுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்நடராஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எனக்கும் டாக்டர் கார்த்திகேயனுக்கும் கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரிமாதம் திருமணம் நடந்தது.

மேல்படிப்புக்காக திருமணத்திற்குப் பின்னர் நானும், எனது கணவரும் வெளி நாடு சென்று விட்டோம். பின்னர் சென்னைக்கு வந்துதனிக்குடித்தனம் நடத்தி வந்தோம். அப்போது வரதட்சணை கேட்டு எனது கணவர் கொடுமைப்படுத்துவார், அடிப்பார்.

திருமணத்தின்போது எனது தந்தை எனக்கு 150 பவுன் நகை, சான்ட்ரோ கார், சீர்வரிசை ஆகியவற்றைக் கொடுத்தார்.இதுபோததென்று தனது படிப்புச் செலவுக்காக ரூ. 19 லட்சம் கேட்டு என்னை சித்திரவதை செய்தார்.அவரது தாயாரும்தொலைபேசி மூலம் பேசி கூடுதல் வரதட்சணை வாங்கிக் கொடுக்குமாறு மிரட்டுவார்.

இதுகுறித்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி புகாரைபதிவு செய்யக் கூட இல்லை. மாறாக, எங்களுக்கு முன்பாகவே எனது கணவர் வீட்டாருக்கு டீ வாங்கிக் கொடுத்து உபசரித்தார்.

காவல் நிலையத்தில் புகாரா செய்கிறீர்கள், தொலைத்துக் கட்டி விடுவோம் என கணவர் வீட்டார் எங்களை மிரட்டினர். இந்தப்பிரச்சினை தொடர்பாக சென்னைக்கும், சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கும் எனது தந்தை அலைந்ததால் அவரது கிளினிக்கையும்பார்க்க முடியவில்லை.

இந்த இடைவெளியைப் பயன்படுத்தி எனது கணவர் வீட்டார் முன் ஜாமீன் பெற்று விட்டனர். இதன் பிறகுதான், கடந்த மாதம்இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி புகாரைப் பதிவு செய்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியிருந்தார் அனு காயத்ரி.

புகார் கொடுத்து விட்டு வந்த அனு காயத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை மன நோயாளி போல சித்தரிக்க அவர்முயலுகிறார். என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும், திடீரென சிரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவார்.தேனிலவின்போது கூட அவர் என்னிடம் சிரித்துப் பேசவில்லை, சரியாகப் பழகவில்லை என்றார்.

அனுகாயத்ரியின் புகார்களை டாக்டர் கார்த்திகேயனும், அவரது பெற்றோரும் மறுத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி டீன்குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X