கலாமுக்காக சைவத்துக்கு மாறிய ஐஸ்லாந்து!
ரெய்ஜாவிக்:
ஐஸ்லாந்து நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்ட வரவேற்பு விருந்துநிகழ்ச்சி முற்றிலும் சைவ விருந்தாக அமைந்தது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஐஸ்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகையைப் பாராட்டிகெளரவிக்கும் வகையில் ஐஸ்லாந்து குடியரசுத் தலைவர் ஒலபூர் ரக்னார் கிரிம்சன் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தின் முக்கிய அம்சமே, முற்றிலும் சைவ விருந்தாக அமைந்ததுதான். அப்துல் கலாம் அசைவம் சாப்பிட மாட்டார்என்பதால், அவரைக் கெளரவிக்கும் விருந்தையும் சைவ விருந்தாகவே நடத்த ஐஸ்லாந்து குடியரசுத் தலைவர்உத்தரவிட்டிருந்தார்.
இதனால் விருந்துக்கு வந்திருந்த அனைவருமே சைவ சாப்பாட்டை ருசிபார்த்தனர். ஐஸ்லாந்து நாட்டு வரலாற்றிலேயே அரசுமுறை சுற்றுப்பயணம் வந்துள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் கலந்து கொண்ட விருந்து, சைவமாக நடத்தப்பட்டது இதுவே முதல்முறை என்று ஐஸ்லாந்து குடியரசுத் தலைவர் குறிப்பிட்டபோது, அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
அப்துல் கலாமின் வருகை ஐஸ்லாந்து மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது எளிமை மற்றும் பழகும் தன்மையால் அவர்கள்கவரப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, விருந்து நிகழ்ச்சியில் அவரை சந்தித்துப் பேச ஏராளமானோர் குவிந்து விட்டனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |