For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சர்கள் மீது ஜெ. கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

தமிழக அரசைக் குறை கூறி பேசி வரும் சில மத்திய அமைச்சர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபுதுவையில் நடந்து வரும் தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார்.

புதுவை அண்ணாமலை ஹோட்டலில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது. மத்திய உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் தொடங்கிய இந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா, புதுவை முதல்வர் ரங்கசாமிமற்றும் ஆந்திர, கேரள, கர்நாடக மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை கடுமையாக சாடிப் பேசினார். ஜெயலலிதாபேசுகையில், தமிழக அரசு மீது தமிழகத்தைச் சேர்ந்த சில மத்திய அமைச்சர்கள் அவதூறான புகார்களைக் கூறுவதும்,தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுமாக உள்ளனர். இது தேசிய நலனுக்கு விரோதமாக அமைந்துள்ளது, மத்திய,மாநில அரசுகளிக்கிடையே நிலவும நல்லுறவைக் கெடுப்பதாக அமைந்துள்ளது.

பெடரல் அமைப்பைக் கொண்ட குடியரசு ஆட்சி இந்தியாவில் நடந்து வருகிரது. மாநில அரசுகளுடன் நல்ல புரிதலுடன் கூடியஉறவை மேம்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநில அரசுகளைவழிநடத்தி அவற்றை அரவணைத்துச் செல்ல வேண்டியது மத்தியஅரசின் கடமையாகும்.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தசில அமைச்சர்களுக்கு இந்த உணர்வு இல்லை. மாநில அரசை அவர்கள் முற்றிலும்புறக்கணிக்கிறார்கள். மாநில அரசு மீது புகார் கூறுவதே அவர்களது வேலையாகப் போய் விட்டது. இதை முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு அவதூறாகப் பேசி வரும்தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவு நீடிப்பதற்கு இந்த அமைச்சர்கள் பெரும் இடையூறாக இருக்கிறார்கள்.

தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு மத்தியஅரசு பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டம். திட்டங்களுக்கு உடனடியாகஅனுமதி தர வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதார நிலை மேம்படவும், மக்களின் வாழ்க்கைத் தரம்மேம்படவும், தொழில் வளர்ச்சி பெருகவும் மத்திய அரசு தாராளமாக உதவ வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிறிதளவும் உதவவில்லை என்பதை வேதனையுடன் இங்குதெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற கூட்டம் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான, உபயோகரமானவிவாதங்களை நடத்தி பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அடுத்த மாநாட்டை சென்னையில் நடத்த ஆர்வமாக உள்ளேன்என்றார் ஜெயலலிதா.

முன்னதாக தொடக்க உரையாற்றிய சிவராஜ் பாட்டீல்பேசுகையில், சுனாமி பாதிப்பிலிருந்து நாம் வேகமாக மீண்டு விட்டோம்.ஆனால் மறு சீரமைப்பு என்ற மிகப் பெரிய பணி நம் முன் காத்துள்ளது.

சுனாமி தாக்குதலை நாம் முன்னுதாரணமாக கொண்டு இதுபோன்ற இயற்கைச் சீரழிவுகளிருந்து மனித உயிர்களைக் காப்பதுதொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும்.

எதற்கும் தயார் நிலையில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும், தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சீரழிவின்பாதிப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும்.

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரிப் பிரச்சினை நெடுங்காலமாக தீராத தலைவலியாக உள்ளது. கழுத்திற்குமேலே தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் போல இப்பிரச்சினை நீடித்து வருகிறது.

இதேபோல வேறு சில மாநிலங்களுக்கிடையேயும் நீர் பங்கீட்டுப் பிரச்சினை, மின்சாரப் பகிர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.சம்பந்தப்பட்ட மாநிலங்கள் விரும்பினால் அப்பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆந்திராவில் பெரும் பிரச்சினையாக நீடித்து வரும் நக்சலைட் பிரச்சினை, இப்போது கர்நாடகத்திற்கும் பரவி வருகிறது. இதைத்தடுக்க, காவல்துறை நவீனமயமாக்கல் அவசியமாகிறது. மேலும் குற்றவாளிகள் குறித்த தகவல் பரிமாற்றமும் மிக அவசியம்.இதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும்.

மத ரீதியான மோதல்களை சமாளிக்க புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும். இதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மதங்களுக்கிடையே ஒற்றுமை நிலவுவும், மத மோதல்களைத் தடுப்பதிலும் மாநில அரசுகளும், காவல்துறையும் பெரும்பங்காற்ற வேண்டும். இந்ததப் பிரச்சினைகள் மாநில அரசுகளின் பிரச்சினை.

கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடலோரப் பாதுகாப்பு திட்டம் ஒன்றை நடப்பு நிதியாண்டிலேயே மத்தியஅரசுகொண்டு வர வுள்ளது.

தென் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த திட்டமிடுதல் அவசியம். தென் மாநிலங்களில் பொதுவாகஉள்ள பிரச்சினைகள் குறித்த தீர்வுகளை அனைத்து தென் மாநிலங்களும் ஒருங்கிணைந்து பேசித் தீர்க்க வேண்டும். முக்கியத்தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார் சிவராஜ் பாட்டீல்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வாஜ்பாய் பிரதமராகஇருந்தபோது இந்த மாநாடு நடத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X