For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்புவின் மனைவிக்கு நீதிமன்றம் அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நீதிமன்றத்திற்குத் தவறான தகவலைக் கொடுத்ததற்காக அப்புவின் மனைவி நிர்மலாவுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவின் மனைவி நிர்மலா உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 9ம் தேதி ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்புவைப் பார்க்க தனக்கோ, உறவினர்களுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ சிறை நிர்வாகம் அனுமதிதர மறுப்பதாக கூறியிருந்தார்.

இதற்கு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நிர்மலாவின் வழக்கறிஞர் சாலமன் பிரான்சிஸ் பலமுறை கடலூர் சிறைக்கு சென்று அப்புவை சந்தித்துப்பேசியுள்ளார். அதேபோல அப்புவின் குடும்பத்தினரும் பல்வேறு தேதிகளில் அப்புவை சந்தித்துள்ளனர். சிறை பதிவேட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இம்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.டி.தினகரன் முன்பு வந்தது. அப்போது ஏற்கனவே கொடுத்த மனுவை வாபஸ் பெற விரும்புவதாகநிர்மலாவின் வழக்கறிஞர் கூறினார். அதற்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நீதிமன்றத்திற்கு தவறான தகவலை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் மனு கொடுத்துள்ளனர். அவர்களை அப்படியே விட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று அரசு வழக்கறிஞர் துரைசாமி வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி தினகரன், தவறான தகவலைக் கொடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, தேவையில்லாத செலவுக்கு வித்திட்டதற்காக நிர்மலா ரூ.10,000 நீதிமன்ற செலவாக கட்ட வேண்டும். இன்னும் 4 வாரத்திற்குள் இந்தப் பணத்தை கட்ட வேண்டும். இப்பணம் இலவச சட்ட உதவி மையத்தில் சேர்ப்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X