For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாசன் மத்திய அமைச்சராகிறார்: பாமகவுக்கு மேலும் ஒரு பதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சரவை வரும் 23ம் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது.அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி எம்பி பேராசிரியர்ராமதாஸ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை டெல்லி திரும்பினார். இதையடுத்துஅவரை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர்.

அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் வரும் 23ம் தேதி அமைச்சரவையை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக சேர்க்கப்படுகிறார்.

அதேபோல, புதுவையைச் சேர்ந்த பாமக எம்.பி. ராமதாஸும் மத்திய அமைச்சராகிறார். பாமகவுக்கு ஏற்கனவே 2 அமைச்சர்கள்உள்ளனர் (டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு,). இந் நிலையில் 3வதாக ஒரு அமைச்சரை பாமக பெறவுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின்போது இளங்கோவனின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர்க்க பல வழிகளிலும்இளங்கோவன் முயற்சித்து வருகிறார்.

அதே போல ஒரு கேபினட் அமைச்சரைக் குறைக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், அந்தக்கோரிக்கையை திமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது

இவர்கள் தவிர கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி, செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாகபதவியேற்கவுள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது முதலே அமைச்சரவையில் இடம் பிடிக்க வாசன் தீவிரமாகப் போராடி வந்தார்.இப்போது தான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

வாசன் மத்திய அமைச்சர் ஆவதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க போட்டா போட்டி நடக்கிறது. தனதுஆதரவாளரான தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனத்தை தலைவராக்க வாசன் முயற்சிக்கிறார்.

ஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலுஉள்ளிட்டோர் கடுமையாக முயன்று வருகின்றனர்.

சமீபகாலமாக சோனியாவுக்கு நெருக்கமாகியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன். சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரதுக்காக விட்டுக்கொடுத்தவர் இவர். இவரை தலைவராக்க காங்கிரஸ் தலைமை விரும்பினாலும் அதற்கு சிதம்பரம் தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X