கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு திடீரென சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின் அவர் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார்.
இன்று காலை சென்னை கிரீம்ஸ் ரோட்டிலுள்ள ரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற கருணாநிதிக்கு ஸ்கேன்,ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் செய்யப்பட்டன.
சுமார் 1 மணி நேரம் நடந்த பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு கருணாநிதி வீடு திரும்பினார்.
கருணாநிதிக்கு ஜீரண உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதற்காகத் தான் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும்மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications