சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இருக்கிறார். அவர் விரைவில் இடமாற்றம்செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கட்ஜூ மாற்றப்படுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.அவருக்குப் பதில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
இதேபோல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள என்.தினகரன் பதவி உயர்வு பெற்று ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றதலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
நீதிபதிகள் இடமாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்குக்கூடுதலாக 17 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications