For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி இழக்கிறார் கராத்தே: புதிய துணை மேயர் சுகுமார் பாபு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன், சென்னை மாநகராட்சியின் துணை மேயர்பதவியிலிருந்தும் விரைவில் நீக்கப்படுகிறார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக திகழ்ந்து வந்த கராத்தே தியாகராஜன் கடந்த ஒரே மாதத்தில் தலைகீழானமாற்றத்தை சந்தித்தார்.

ஜெயலலிதாவின் கடும் கோபத்தை சந்தித்து வரும் அவர் அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவரை அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார் ஜெயலலிதா.

இந் நிலையில் அவரது துணை மேயர் பதவியையும் பறிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி விதிமுறைப்படி3 மாதங்களுக்கு ஒருமுறை மாமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

இந்த வகையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் மாநகராட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அடுத்த முறை மாமன்றம் கூடும்போது,கராத்தே தியாகராஜனுக்கு எதிராக அதிமுகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது மாமன்ற அதிமுக அணித் தலைவராக உள்ள சுகுமார் பாபு, புதிய துணை மேயராக தேர்வுசெய்யப்படுவார் எனத் தெரிகிறது. ஆனால், அதிமுகவில் அதிருப்தியாக உள்ள கவுன்சிலர்கள் காலை வாரிவிடக் கூடாதுஎன்பதற்காக அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் தற்போது கட்சிகளுக்கு உள்ள உறுப்பினர்கள் விவரம்:

மொத்த உறுப்பினர்கள் 155

அதிமுக அணி
அதிமுக - 77
முஸ்லீம் லீக் - 1
மொத்தம் - 78

திமுக அணி
திமுக - 54
காங்கிரஸ் - 11
எம்.ஜி.ஆர். கழகம் - 1
மதிமுக - 1
இந்திய கம்யூனிஸ்ட் - 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -1
இந்திய ஜனநாயக லீக் - 1
தமிழ் மாநில முஸ்லீம் லீக் -1
மொத்தம்-71

பாரதீய ஜனதா - 3
சுயேச்சைகள் - 3 (இவர்களில் கராத்தேவும் ஒருவர்)

அதிமுக அணியில் 78 பேர் உள்ளனர். அதிமுகவுக்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது. இதனால் பெரும்பான்மை பலம் இருந்தாலும்சில அதிமுக கவுன்சிலர்கள் மீது சந்தேகம் உள்ளது. இதையடுத்து அவர்களுடன் சமாதானப் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் விரைவில் கராத்தேவை தூக்கிவிட்டு சுகுமார் பாபு அந்தப் பதவியில் அமர்வார் என்று தெரிகிறது.

சென்னை மாநகராட்சியின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கராத்தே மீது வழிப்பறி வழக்கு?

கராத்தே மீது வழிப்பறி உள்பட 300 வழக்குகள் வரை போட போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

துணை மேயராக கராத்தே இருந்தபோது விளம்பர பலகை வைப்பதில் அனுமதி அளித்ததில் பெருமளவு ஊழல்செய்துள்ளார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார், 4 வருடங்களாக காட்டிய சொத்து கணக்கு தெளிவாகஇல்லை, வருடா வருடம் சொத்துக் கணக்கில் மாற்றங்கள் என்று அவர் மீது குற்றச்சாட்டுகளை போலீசார் அடுக்கிவருகின்றனர்.

இது தவிர வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கிலும் போலீசார் அவர் பெயரை சேர்த்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரபல செல்போன் நிறுவனம் சென்னையில் விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதிவழங்குவதற்கு, அந்த நிறுவனத்தை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டதாகவும் தெரிகிறது. இது குறித்து அந்தநிறுவனம் சார்பில் முதல்வருக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த புகாரும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேலும் மாதம் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளை கராத்தேமிரட்டியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சமீபத்தில் மாநகராட்சி அறையில் ஏற்பட்ட தீ விபத்துக்குக் கூடஅவர்தான் காரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உள்பட பல வழக்குகள் பதிவு செய்ய காவல்துறைமுடிவு செய்துள்ளது. இந்த வழக்குகளால் அவர் ஆயுள் முழுவதும் தப்பிக்க முடியாது என்று போலீசார்ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த 91ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை தியாகராஜன் மீது 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்ட்டிருந்தது.அந்த பைல்களையும் தற்போது போலீசார் தூசு தட்டி எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X