• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை மேயர் ஜாமீனில் விடுதலை: காட்டி கொடுத்த திமுக விஐபி

By Staff
|

மதுரை:

பாஜக பெண் கவுன்சிலருடன் ஊர் சுற்றியபோது கார் விபத்தில் சிக்கி அந்தப் பெண் பலியாகக் காரணமாக இருந்ததால், தலைமறைவானமதுரை மேயர் செ.ராமச்சந்திரன் தங்கியிருந்த இடம் குறித்து திருச்சியைச் சேர்ந்த திமுக பிரகர் ஒருவரே போலீஸாருக்கு போட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.

மதுரை மாநாகராட்சி பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி சமீபத்தில் பெருங்குடி அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். மதுரைமேயர் செ. ராமச்சந்திரனின் மிட்சுபிஸி லேன்சர் காரில் சென்று போது அவர் விபத்தில் சிக்கி பலியானார்.

அந்தக் காரை ஓட்டிச் சென்றதும் செ. ராமச்சந்திரனே தான். ஆனால், தனக்குப் பதிலாக ஒரு போலி டிரைவரை செட்அப் செய்துவிட்டுகாரில் இருந்து கைலியுடன் தப்பியோடினார் மேயர்.

இதைத் தொடர்ந்து இவர் செட்-அப் செய்த டிரைவரான கண்ணன் என்பவர் போலீசில் சரணடைந்தார். விபத்தின்போது மேயர் கட்டியிருந்தரத்தக் கறை படிந்த கைலியைக் கட்டிக் கொண்டு போலீசிடம் சரணடைந்த கண்ணன் ஆரம்பத்தில் இருந்தே முன்னுக்குப் பின் முரணாகஉளறினார்.

விபத்துக்குள்ளானது ராமச்சந்திரனுக்கு சொந்தமான லேன்சர் கார் ஆகும்.

ஆனால் போலீசாரிடம் வாக்குமூலம் தந்த கண்ணன், நான் செவப்பு கலர் டாடா சுமோவுல பாண்டீஸ்வரி அக்காவ கூட்டிட்டுபோகும்போது காரு பஸ் மேல மோதி அப்புறம் மரத்துல மோதிருச்சு சார். அதுல அக்கா செத்துப் போயிட்டாங்க என்றார்.

என்னது நீ ஓட்டுனது டாடா சுமோவா என்று நிமிர்ந்து உட்கார்ந்த போலீசார், கண்ணனின் கன்னத்தில் காது கிழியும் அளவுக்கு பளார்களைவிட்டு விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போதும் கண்ணன் உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை.

இதையடுத்து போலீஸார் தங்களது ஸ்டைலில் கண்ணனை வெறும் ஜட்டியோடு உட்கார வைத்து, தூக்கிப் போட்டு மிதித்தபோதுஉண்மையை ஒப்புக் கொண்டார்.

திருமணமான கவுன்சிலர் பாண்டீஸ்வரியுடன் காரில் ஊர் சுற்றிய ராமச்சந்திரன் கார் விபத்துக்குள்ளானதும் தனது செருப்பைக் கூடகாரிலேயே போட்டுவிட்டு கைலியுடன் ஓடியிருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து செ. ராமச்சந்திரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், ரவுட்டிதனத்துக்கும் போக்கிரித்தனத்குக்கும்பேர் போன செ. ராமச்சந்திரன் தலைமைறைவாகி விட்டார்.

அவரை போலீஸார் வலை வீசித் தேடி வந்த நிலையில், திருச்சியில் வைத்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

செ. ராமச்சந்திரனை திமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகரே காட்டிக் கொடுத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் உள்ளபிரமுகரின் ஆலோசனையின் பேரில் செ. ராமச்சந்திரன் பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இத் தகவல் திருச்சி பிரமுகருக்கு எதிர்கோஷ்டியில் உள்ள இன்னொரு பிரமுகருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து செ.ராமறைந்திருக்கும் ஹோட்டல் குறித்து போலீஸாருக்கு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அந்த ஹோட்டலைக் கண்காணித்துவந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை செ.ரா. ஹோட்டலை விட்டு வெளியேறி அண்ணா கலையரங்கத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் கே.கே.நகர்சோதனைச் சாவடி அருகே சென்று காரை நிறுத்தியுள்ளார். அப்போது போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Madurai Mayor Ramachandran

திமுகவைச் சேர்ந்த ஒரு பிரமுகரே செ.ராவைக் காட்டி கொடுத்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையைமதுரை கொண்டு வரப்பட்ட செ. ரா, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

மதுரை சரக டிஐஜி கருணாசாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு அங்கு விசாரணை நடந்தது. அதன் பின்னர் அவரை பெருங்குடி காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர். அங்கு வைத்து திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரித்தனர்.

ஜாமீனில் விடுவிப்பு:

இந் நிலையில் இன்று செ.ரா. மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 14ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராமசந்திரனின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ராமசந்திரனை ஜாமீனில் விடுவித்துநீதிபதி உத்தரவிட்டார். திங்கள்கிழமைதோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X