For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிக்குள் மேனேஜர் தூக்கு போட்டு தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

திருநெல்வேலியில் வங்கி மேலாளர் ஒருவர் வங்கிக்குள்ளேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை ஜங்கஷன் பஸ் நிலையம் அருகே உள்ள சவுத் இந்தியன் வங்கியில் கிளை மேலாளராக இருந்தவர் அருள் பிரகாசம்.பாளையங்கோட்டை சமாதானபுரம் பரன்சுதன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர் தனது மனைவியிடம் நான் வேலை விஷயமாக நாகர்கோவில் சென்று வருகிறேன். வர தாமதம் ஆகும். எனவே என்னைதேட வேண்டாம். நீங்கள் வழக்கம் போல் கோவிலுக்கு போய் வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதே போல தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியரிடம் போன் மூலம் நான் சொந்த ஊருக்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.பிறகு அவர் நேராக வங்கிக்கு வந்து காவலாளியிடம் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதையெல்லாம் முடிக்க வேண்டும்.எனவே இரவு இங்கேயே தங்கிவிடுகிறேன் என்று கூறினார்.

அலுவலகத்தின் உள்ளே சென்ற அவர் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். காலையில் பணிக்கு வந்த உதவி மேலாளர்நீருஜா வங்கியின் முன்பக்க ஷட்டர் திறக்கப்பட்டிருப்பது கண்டும், உள்ளே தாழ்ப்பாள் போட்டிருப்பதை பார்த்தும் வங்கிகொள்ளை போய்விட்டதோ என அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு மேலாளர் அருள்பிரகாசம் உள்ளே இருப்பது தெரிய வந்தது. வங்கி ஊழியர்கள் வந்து கதவை தட்டினார்கள். ஆனால்கதவு திறக்கப்படவில்லை. உடனே இதுபற்றி வங்கி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது அருள்பிரகாசம் அங்கு தூக்கு போட்டுபிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து வங்கியின் கதவு உடைக்கப்பட்டு அருள் பிராகசத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லைஜெங்ஷனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.ஏ. ராஜாவுக்குத் தொடர்பு? கடிதம் சிக்கியது:

தற்கொலை முன் அருள்பிரகாசம் ஒரு கடிதம் எழுதி சுவற்றில் ஒட்டியுள்ளார் அந்தக் கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.அந்த கடிதத்தில் அருள்பிரகாசம் கூறியிருப்பதாவது:

நான் கடந்த மே மாதம் நெல்லை சவுத் இந்தியன் வங்கி மேலாளராக பணியில் சேர்ந்தேன். வடக்கன் குளம் கல்வி நிறுவனங்களின்அதிபர் எஸ்.ஏ. ராஜா எங்கள் வங்கியில் வரவு-செலவு கணக்கு வைத்திருந்தார். அவர் ஒரு முறை பணம் கேட்டு வங்கிக்கு செக்அனுப்பினார்.

அவரது கணக்கில் பணம் இல்லாததால், அவருக்கு பணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் உதவிப் பொது மேலாளர் பேபிஎன்னிடம் அவருக்கு பணம் கொடுக்குமாறு வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

ஒரிஸ்ஸாவில் எஸ்.ஏ. ராஜாவுக்கு சொந்தமான ஒரு கல்லூரியை ரூ. 10 கோடிக்கு விற்க முயற்சி செய்தனர். அந்த கல்லூரியைநெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் தாளாளர் வாங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

அவர் எனக்கு உறவினர் என்பதால் என் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த கல்லூரியை வாங்க அவர்மறுத்துவிட்டார். அவர் வாங்காததற்கு நான் தான் காரணம் என்று எனது வங்கியின் உதவிப் பொது மேலாளர் என் மீது கோபம்கொண்டார். என்னுடைய மேனேனர் பொறுப்பை எனக்கு கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரியிடம் கொடுத்தார்.

மேலும் என் மீது மோசடி பழி சுமத்தி என்னை கேவலப்படுத்தினார். நெல்லையை சேர்ந்த ஆறுமுகப்பாண்டியன் என்பவருக்கு ரூ.12 லட்சம் வங்கியில் இருந்து கொடுக்குமாறு வாய் மொழியாக உத்தரவு கொடுத்தார். ஆனால் எழுத்துப் பூர்வமாககொடுக்கவில்லை.

வேறு வழியில்லாமல் எனது சொந்த பணத்தில் இருந்து ரூ.12 லட்சத்தை அவருக்கு கொடுத்தேன். இந்தப் பணத்தை வட்டிக்காககொடுத்ததாக என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

கடந்த சனிக்கிழமை அன்று மேலதிகாரிகள் நெல்லை அலவலகத்துக்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்கள். என் மீதுநடவடிக்கை எடுப்பதாக மெமோ கொடுத்தனர். இதனால் நான் மன வேதனையடைந்தேன்.

கடவுள் அறிய நான் நல்லவன். மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவன். கடவுள் வந்து இவர்களிடம்விசாரிக்கப் போவதில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

என்னுடைய சாவுக்கு உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர், திருவனந்தபுரம் கிளை மேலாளர் ஆகிய மூவரும் தான்காரணம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

அருள் பிரகாசம் குறிப்பிட்டுள்ள இந்த எஸ்.ஏ.ராஜா தான் ராஜா கல்வி நிலையங்களின் அதிபர் ஆவார். ஆலடி அருணாகொலையில் முக்கிய குற்றவாளியாகவும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜா என்றாலே பிராடுத்தனம், மோசடி, மிரட்டல் என்றுபெயராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவரும் வங்கியின் அதிகாரிகளும் சேர்ந்து டார்ச்சர் தந்து ஒரு அப்பாவி வங்கி மேலாளரின் உயிரைப் பறித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X