பாஜக பூசல் தீவிரம்: உமா பாரதி சஸ்பெண்ட்
டெல்லி:
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாஜகவில் இருந்து செல்வி உமா பாரதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த பாபுலால் கவுர் மாற்றப்பட்டு, புதிய முதலமைச்சராக சிவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.இதை பாஜக மேலிடம் அறிவித்தது.அவரை முறைப்படி தேர்ந்தெடுக்க பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் போபாலில் நடந்தது. இதில் மேலிட தலைவர்கள் அருண்ஜெட்லி, பிரமோத் மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் உமாபாரதியும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். உமாபாரதி மற்றும் 16எம்எல்ஏக்களும் மேலிட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உமாபாரதியின் ஆதரவாளர்கள் சிறிது நேரத்தில் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டனர். அங்குள்ளபொருட்களை அடித்து நொறுக்கினர்.
உமாபாரதியின் இந்த நடவடிக்கையை முன்னாள் பிரமரும், பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் உள்பட பலர்கண்டித்தனர். இதை தொடர்ந்து கட்சிரீதியாக உமாபாரதி மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைவர் அத்வானி தலைமையில்கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் உமாபாரதி நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பாஜகவின் பொதுசெயலாளர் அருண் ஜெட்லி கூறியதாவது:
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் செல்வி உமா பாரதி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும்அவரது நடவடிக்கைள் குறித்து 3 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஏன் தங்களின்நடவடிக்கைளை காரணம் காட்டி உங்களை கட்சியை விட்டு நிரந்தரமா நீக்கக் கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சி மேலிடம் சில நாட்களாக அவரது நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. அவர் கட்சிக்கு எதிராக கருத்துதெரிவிப்பது மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதுமாக இருந்து வந்தார். அதை தொடர்ந்து இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதற்கிடையே உமாபாரதி போபாலில் இருந்து தமது ஆதரவாளர்களுடன் அயோத்திக்கு பாத யாத்திரை ஊர்வலம் செல்வதாகஅறிவித்து புறப்பட்டுள்ளார். அதில் அவரது ஆதரவாளர்கள் பாஜக கட்சி கொடியை ஏந்தி செல்வதற்கு பிரமோத் மகாஜன் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
இந்த பாதயாத்திரை உமாபாரதியின் தனி நிகழ்ச்சி இதில் கட்சி தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.மேலும் கட்சி கொடிகளையும் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் உமா பாரதி நானே உண்மையான பாரதிய ஜனதா கட்சி என்று கூறி வருகிறார். நான் இந்த கட்சியை வளர்ப்பதற்குஎவ்வளவு பாடுபட்டிக்கிறேன். என்னை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக சொல்கிறார்கள். அப்படி செய்து பார்க்கட்டும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications