சென்னை வரும் பில் கேட்ஸ்: தயாநிதி முயற்சிக்கு வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வரும் 9ம் தேதி சென்னை வருகிறார்.4வது முறையாக இந்தியா வரும் கேட்ஸ், பெங்களூரில் நடக்கும் ஒரு மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். அவரது பயணத் திட்டத்தில் சென்னை இல்லை.
ஆனால், அவரிடம் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் சென்னை வகிக்கும் முக்கிய இடத்தை விளக்கிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரை சென்னைக்கும் வருமாறு அழைத்தார்.
பெங்களூருக்கு இணையாக சென்னையும் மிக வேகமாக சாப்ட்வேர் துறையில் முன்னேறி வருவாத மாறன் எடுத்துச் சொன்னதையடுத்து, பெங்களூர் மாநாட்டைத் துவக்கி வைத்துவிட்டு 9ம் தேதி சென்னை வர ஒப்புக் கொண்டார்.












Click it and Unblock the Notifications