For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் ஊருக்கு உபதேசம்: ஓபி கோபம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதாவைபதவி விலகச் சொல்வதற்கு கருணாநிதிக்கு உரிமையில்லை என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பியின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை விவரம்:

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி சில தீர்மானங்களைநிறைவேற்றியுள்ளனர். அதில், அரசு மீதும், அரசின் நடவடிக்கைகள் மீதும் கண்டனம் தெரிவித்தும், முதல்வர் பதவி விலகவேண்டும் என்று கோரியும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது.

வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிடவும், மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்கவில்லை என்றுதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கூறுகின்றன.

ஆனால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மாவட்ட அளவிலும், ஊராட்சி மற்றும் வார்டு அளவிலும் வெள்ள நிவாரணஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான உத்தரவு 12.12.2005 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான குழுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத்தலைவர், 2 அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அளவிலான துறை அதிகாரிகளைஉறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மற்றும் வார்டு அளவிலும் இதுபோல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்துக் கட்சிகளையும் கொண்டகுழுக்களை அமைக்கவில்லை என்று திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதைமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து வருபவர்களை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து நலம் கூறி விசாரித்தபோது, 9 மணிக்குநிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தும், ஏன் அதிகாலையிலேயே சென்றீர்கள் என்று கேட்டபோது, சீக்கிரமேசெல்ல வேண்டும் என்று சிலர் வந்து கூறியதால்தான் தாங்கள் சென்றதாக காயமடைந்தவர்கள் முதல்வரிடம் கூறியுள்ளனர்.

இதிலிருந்து நிச்சயமாக ஒன்று தெரிகிறது. அதாவது வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்வருக்கும், அவரது தலைமையிலானதமிழக அரசுக்கும் கிடைத்து வரும் நற்பெயரை கெடுக்க எந்த வகையிலேனும் சதி செய்ய வேண்டும் என்ற கெடு மதியோடு, சிலர்செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

முதல்வரைப் பதவி விலக கோரும் உத்தமர் கருணாநிதி, இதற்கு முன் தானே பதவி விலகி நாட்டுக்கு வழி காட்டிய சம்பவம்ஏதேனும் உண்டா?

1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகளால் சிதைக்கப்பட்டதே கோவை. சட்டமும், ஒழுங்கும் சல்லடைக் கண்களாகதுளைக்கப்பட்டதே. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பதவி விலகினாரா?.

தான் டாக்டர் பட்டம் பெறுவதற்கு எதிராக குரல் எழுப்பினாரே ஒரு இளைஞர், அந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்உதயக்குமார் அநியாயமாக கொல்லப்பட்டு, அவனது தந்தையே, என் மகன் இவனில்லை என்று மறுதலிக்கும் நிலைக்குமிரட்டப்பட்டாரே, அன்றைக்கு பதவி விலகினாரா கருணாநிதி?.

மாஞ்சோலை தோட்டத்து விவசாயிகளை அடித்து விரட்டி தாமிரபரணி ஆற்றில் ஜல சமாதி அடையச் செய்த சம்பவம் நடந்ததே,அன்றைக்காவது ராஜினாமா செய்தாரா அப்போதைய முதல்வர் கருணாநிதி?.

இன்று ஊருக்கு உபதேசம் செய்யும் கருணாநிதி, தான் செய்த ஜனநாயகப் படுகொலைகளை சற்றேனும் நினைத்துப் பார்த்திருந்தால்,முதல்வர் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்லியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X