மாலத்தீவில் காதலியுடன் புத்தாண்டு கொண்டாடும் ராகுல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராகுல் காந்தி தனது காதலியுடன் மாலத் தீவில் புத்தாண்டை கொண்டாடுகிறார்.ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமை இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். மாலத்தீவுக்கு சுற்றுலாசெல்வதற்காக வந்ததால் அவர் சென்னையில் காங்கிரஸ் எம்பிகள் யாரையும் சந்திக்கவில்லை.
இரவில் விமான நிலையத்தில் தங்கிய ராகுல் மறுநாள் காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வழியாகமாலத்தீவிற்கு சென்றார்.
ராகுல் காந்தி மாலத்தீவில் புத்தாண்டை கொண்டாடுகிறார். ராகுல் காந்தியுடன் அவரது கொலம்பிய நாட்டு காதலி ஜூனைதாவும்புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். ராகுல் காந்தி கடல் நீர் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். மாலத்தீவில்இருக்கும் போது அந்த விளையாட்டில் ஈடுபடுவார்.
சோனியா காந்தி அவரது தாயார் பாவோலா, சகோதரி அலெஸ்சாண்டிரா ஆகியோரும் மாலத்தீவு சென்று ராகுலுடன் புத்தாண்டைகொண்டாடுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications