எனக்கா.. நெஞ்சு வலியா?: விஜயகாந்த்
சென்னை:
எனக்கு நெஞ்சு வலி என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று நடிகர்விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் இடிபடப் போவதாக வெளியாகி வரும் செய்திகளால் விஜயகாந்த் வட்டாரத்தில்பெரும் பரபரப்பு நிலவுகிறது. நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டன.இந் நிலையில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் விஜயகாந்த் திடீரென மெட்ராஸ் மிஷன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இதை டாக்டர்களும் உறுதிப்படுத்தினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று பிற்பகலுக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீடுதிரும்பிய விஜயகாந்த்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, எனக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியாகும்செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை.
கட்சி ஆரம்பித்த பின்னர் சுற்றுப்பயணத்தில் உள்ள நான் பொதுவான ஒரு செக்கப்பை செய்து கொண்டால் நல்லது என்று வீட்டில்உள்ளவர்கள், நண்பர்கள் அறிவுரை கூறினர். இதனால்தான் அனைவரிடமும் சொல்லி விட்டுத்தான் மருத்துவனைக்கு சென்றேன்.
அங்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்து பார்த்தனர். எனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.இதையடுத்து வீடு திரும்பி விட்டேன். நெஞ்சு வலி வந்திருந்தால் இப்படி சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா.? எனவேதொண்டர்கள் அமைதி காக்க வேண்டும், நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.
இதற்கிடையே விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில், விஜயகாந்த்துக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தொண்டர்கள்கவலைப்படத் தேவையில்லை.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றார். தற்போது வீடு திரும்பி விட்டார். ஏற்கனவேதிட்டமிட்டபடி வருகிற 20ம் தேதி முதல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுகூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications