டெல்லி செல்கிறார் விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி :
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் வருகிற 13ம்தேதி டெல்லி செல்கிறார்.
தே.மு.தி.க.வின் தேர்தல் பிரசாரத்தை படு தீவிரமாக மேற்கொண்டு வரும் விஜயகாந்த்இதுவரை 15 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.தற்போது நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை இன்று முதல் 3 நாட்களுக்குமேற்கொள்கிறார்.
நெல்லையைடித்து விட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 மற்றும் 14 ஆகியதேதிகளில் அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுஅது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அவர் டெல்லிக்குச் செல்வதாக கட்சி வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் திடீர் டெல்லி பயணத்திற்கான காரணம்தெரியவில்லை.












Click it and Unblock the Notifications